புதுதில்லி:
இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுமே இந்தியாதான் என்றும், அந்த பகுதிகளிலுள்ள நாடுகள் இந்தியாவுடன் இணைவதற்கான சூழல் வந்து விட்டதாகவும் ஆர்எஸ்எஸ் தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமார் பேசியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:70 ஆண்டுகளுக்கு முன்பு, மகாத்மா காந்தி தேசத்தின் தந்தை என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். 72 ஆண்டுகளாகவே, எந்த ஆதாரமும் இல்லாமல் காந்தி பழைய தேசத்தின் தந்தை என்று கருதினோம். இப்போது அதை நம்புங்கள் அல்லது நம்பாமல் இருங்கள். அது அவரவர் விருப்பம். ஆனால், இந்தியாவுக்கு ஒரு புதிய தந்தை உருவாகியுள்ளதாகவும் மோடிதான் புதிய இந்தியாவின் தந்தை என்றும் டிரம்ப் கூறியுள்ளார். இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?
ஐரோப்பிய ஒன்றியம் என்ற ஒன்றுஉருவாகும்போது, 350 கோடி மக்கள்தொகை கொண்ட இந்திய சுற்றுப் பகுதிபிராந்தியம் ஏன் ஒரு வலுவான அமைப்பாக உருவாக முடியாது? இந்தியப் பெருங்கடலுடன் தொடர்புடைய நாடுகளுக்கு இடையிலான உறவு பண் டைய காலத்திலிருந்தே உள்ளது. இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் இந்தியா என்று அழைக்கப்பட்டன. இப்போது மீண்டும்அவை அனைத்தும் சேர்ந்து, இந்தியாஎன்று அழைக்கப்படும் நேரம் வந்துவிட்டது. இவ்வாறு இந்திரேஷ் குமார்பேசியுள்ளார்.