ஹைதராபாத்:
கொரோனா ஊரடங்கு, எம்.பில், எம்பிஏ பட்டம் பெற்றஹைதராபாத் ஆசிரிய தம்பதியை, தினக்கூலித் தொழிலாளர்களாக மாற்றியுள்ளது.ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவர் 12 ஆண்டுகளாக தனியார் உயர்நிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகஇருந்தவர். 6 உறுப்பினர் களைக் கொண்ட தனது குடும்பத்தினரைக் காப்பாற்ற, இந்தப்பணியையே நம்பியிருந்தார்.ஆனால், கொரோனா ஊரடங்கினால் பள்ளிகள் மூடப்படவே, ஊதியத்தை இழந்து,வருமானத்திற்காக கூலித்தொழிலாளியாக மாறியுள் ளார். சமூகப் பணிகளில் எம்.ஏ.,கிராமப்புற வளர்ச்சியில் எம்.பில் மற்றும் பி.எட் என சிரஞ்சீவிமூன்று பட்டங்களை பெற்றவர்.
இவரது மனைவி பத்மா. இவரும் தனியார் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். எம்பிஏ பட்டம் பெற்றவர். இவரும் கணவருடன் சேர்ந்து கடந்தஒரு வாரமாக கூலி தொழிலாளர்களாக கொளுத்தும் வெயிலில் வேலை செய்து வருகிறார்.யாரும் ஏப்ரல் சம்பளத் தைப் பெறவில்லை, ரேஷன் கார்டுகள் வைத்திருந்தாலும் ரேசன் கிடைக்கவில்லை என்கிறார் சிரஞ்சீவி. மாநிலத்தில் கிட்டத்தட்ட அனைத்து ஆசிரியர்களும் இதே சூழ்நிலையில் தான் இருக்கின்றனர் என்று கூறும் அவர், இப்போதுவரை, விவசாயிகளின் தற்கொலைகளைதான் நாடு பார்த்திருக்கிறது. இனி ஆசிரியர்கள் தற்கொலைகளையும் பார்க்கலாம்என்று அச்சமூட்டியுள்ளனர்.