புதுதில்லி:
அமெரிக்காவில் நிறவெறி வன்முறையை நிறுத்துமாறும் நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துமாறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதைக் கண்டிப்பதில் சர்வதேச அளவில் ஒருமைப்பாடு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தன்னை இணைத்துக்கொள்கிறது. அமெரிக்காவில் நிறவெறி வன்முறை வெறியாட்டங்களுக்கு முடிவுகட்ட வேண்டும் என்றும், சமூக நல்லிணக்கம் மற்றும் நீதி உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.அமெரிக்க அரசாங்கம் நீதி நிலைநாட்டப்படுவதையும் நிறவெறி வன்முறையில் ஈடுபட்ட கயவர்கள் அமெரிக்க சட்டத்தின்கீழ் கொண்டுவரப்படுவதையும் உடனடியாக உத்தரவாதம் செய்திட வேண்டும்.