tamilnadu

img

ஷ்ரமிக் சிறப்பு ரயில்களில் சமூக இடைவெளி ஒழிப்பு... மூட்டைகள் போல் அடைத்துச் செல்ல உத்தரவு

புதுதில்லி:
சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலி யுறுத்தி 24 பெட்டிகளில் 1200 புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்துச் சென்ற ஷ்ரமிக் சிறப்பு ரயில் இனிமேல், 1,700 பேருடன் முழுக் கொள்ளளவுடன் இயக்கப்பட உள்ளது. அதாவது சமூக இடைவெளி ஒழிக்கப்பட்டு கொரோனா பரவலுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலம் அனுப்ப மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கு இணங்க சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  மே 10-ஆம் தேதி நிலவரப்படி இதுவரை மொத்தம் 366 ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. 287 ரயில்கள் போய்ச்சேர வேண்டிய ஊர்களுக்கு சென்றுவிட்டன. போக்குவரத்தில் 79 ரயில்கள் உள்ளன. ரயில்கள் இயக்கத்தைப் பொறுத்தவரை ஆந்திரா (1), பீகார் (87), இமாச்சல பிரதேசம் (1), ஜார்க்கண்ட் (16), மத்தியப்பிரதேசம் (24), மகாராஷ்டிரா (3), ஒடிசா(20), ராஜஸ்தான் (4), தெலுங் கானா (2), உத்தரபிரதேசம் (127), மேற்கு வங்கம் (2) இயக்கப் பட்டுள்ளன. 

இதுவரை 500 ரயில்கள் வரை இயக்கப்பட்டு அதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். ஆனால், அனைத்து ரயில்களிலும் இணைக்கப் பட்டுள்ள 24 பெட்டிகளிலும் பெட்டிஒன்றுக்கு 72 பேர் பயணிப்பத ற்குப் பதிலாக 50 பேர் மட்டுமே பயணித்தார்கள். சமூக இடை வெளியைக் கடைப்பிடிக்க வேண்டி குறைவான பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இந்தஎண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை முதல் இயக்கப்படும் ஷ்ரமிக் ரயில்கள் மூன்று நிறுத்தங்களில் மட்டும்நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படுக்கை வசதியுள்ள பெட்டியில் முழுக் கொள்ளளவுடன் பயணிகள் பயணிக்க உள்ளனர். சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் ஊர்களுக்கு அழைத்துச் செல்ல ஒரு நாளைக்கு 300 ரயில்களை இயக்க இந்திய ரயில்வே தயாராக உள்ளது என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.அடுத்த சில நாட்களில் முடிந்தவரை அதிகமான புலம்பெயர்ந் தோரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல  விரும்புகிறோம். அதற்கு மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டுமென ரயில்வே மூத்தஅதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.