புதுதில்லி:
தில்லி மெட்ரோ ரயிலில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று, கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது. இதற்கு காங்கிரஸ், பாஜகஆகிய கட்சிகள் மத்தியில்எதிர்ப்பு எழுந்துள்ளதால், தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, பேருந்துகளில் பயணிக் கும் பெண்களிடம் நேரில் சென்று அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்துள்ளார். இந்த வகையில் 7 பேருந்துகளில் ஏறி, இறங்கிய சிசோடியா, பெண்கள் தங்கள் திட் டத்தை அமோகமாக வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.