tamilnadu

img

கழிவுநீர் தொட்டி விஷவாயு தாக்கி 3 ஆண்டுகளில் 288 பேர் பலி... உ.பி.யில்தான் கைகளால் கழிவகற்றுவோர் அதிகம்

புதுதில்லி:
இந்தியாவில் கழிவுநீர்த் தொட்டி விஷவாயு தாக்கி மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 288 பேர் பலியாகி இருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் எவ்வளவோ வளர்ந்தபோதும், கழிவு நீர்த் தொட்டி அடைப்புகளை எடுக்கவும், அவற்றைச் சுத்தம் செய்யவும் இந்தியாவில் இன்னும் மனிதர்களையே பயன் படுத்தும் கொடுமை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு கழிவுநீர்த் தொட்டிக்குள் இறக்கி விடப்படும் அப்பாவித் தொழி
லாளர்கள் விஷவாயு தாக்கி பலியாவதும்தொடர் அவலமாகி விட்டது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் சண்முகம் எழுப்பியஎழுத்துப்பூர்வமான கேள்வி ஒன்றுக்கு சமூகநீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் பதில் அளித்துள்ளது.அதில், “இந்தியாவில் தற்போது கழிவு நீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணியில் 51 ஆயிரத்து 835 பேர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் மிக அதிகமாக 24 ஆயிரத்து 932 பேர் உள்ளனர். தமிழகத்தில் இந்தப் பணியில் மொத்தம் 62 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.மேலும், “கழிவு நீர்த் தொட்டிகளில் உயிரிழந்த தொழிலாளர்கள் விவரம் தங்களிடம் இல்லை” என்று கூறியுள்ள மத்திய அரசு, “எனினும் மாநில அரசுகள்அளித்துள்ள தகவல்களின் 31.08.2020 தேதிக்கு முந்தைய கடந்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 288 பேர் கழிவுநீர்த் தொட்டி விஷ வாயு தாக்கி உயிர்இழந்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளது.