tamilnadu

img

சபரிமலை பக்தர்களுக்கு அனுமதி இல்லை

பத்தனம்திட்டா:
தென்னிந்தியாவில் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்றான சபரிமலை ஐயப்பன் கோவில் கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைத்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோவில் மூடப்பட்டுள்ளது. எனினும் பக்தர்கள் இல்லாமல் வழக்கமான நடைமுறை பூஜைகள் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு தளர்வு விதிமுறையின்படி ஜூன் 8 முதல் வழிபாட்டுத்தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதை அடுத்து மிதுன பூஜைக்கு சபரிமலை கோவில் நடை ஜூன் 14-ஆம் தேதி திறக்கப் போவதாகவும், ஒரு மணி நேரத்திற்கு தலா 200 பேர் வீதம் தினமும் 16 மணி நேரத்தில் 3,200 பேர் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர்  என கோவில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. 

இதுதொடர்பாக கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்,  தேவசம்போர்டு தலைவர் வாசு, தந்திரி மகேஸ் ஆகியோருடன் வியாழன் காலை ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுரேந்திரன்,”மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோவில் நடை 14-ஆம் தேதி திறக்கப்படுகிறது. மேலும் 19-ஆம் தேதி வரை மிதுனம் பூஜையும் நடைபெறவுள்ளது. இந்த பூஜைகளுக்கு பக்தர்கள் அனுமதி இல்லை. கொரோனா பரவலாம் என்பதால் ஜூன் 19-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடக்கவிருந்த ஆராட்டு விழாவும் ரத்து செய்யப்படுகிறது’ என்றார்.

தொடக்கத்தில் கோவில் நிர்வாகம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படு வார்கள் தன்னிச்சையாக அறிவிப்பு வெளியிட்டது. பின்னர் அமைச்சர் சுரேந்திரன் உடனான ஆலோசனைக்கு பின்பு பக்தர்கள் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.