tamilnadu

ஹைட்ரோ கார்பனை எதிர்த்து தீர்மானம்

 புதுச்சேரி,ஜூலை 23- புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்து வதை மத்திய அரசு கைவிட வேண்டும் என புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் ஜூலை 22 ஆம்  தேதி துவங்கியது. இக்கூட்டத்தின் இரண்டாவத நாளில், நீர்  மேலாண்மை அமலாக்கத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி  ஒதுக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்து வதை கைவிட வேண்டும், மாணவர்களுக்கு எதிராக உள்ள  நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை மத்திய அரசு கைவிட  வேண்டும், புதியதாக அறிமுகம் செய்துள்ள மும்மொழி கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும், இரு மொழிக் கொள்கையை தொடர வேண்டும் ஆகிய தீர்மா னங்களை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார்.  பின்னர் இத்தீர்மானங்கள் மீது உறுப்பினர்கள் விவா தம் நடந்தது. அதனைத் தொடர்ந்து பிறகு ஏகமனதாக நிறை வேற்றப்பட்டது.
புதிய ஆணையர்
உள்ளாட்சித்தேர்தல் நடத்துவதற்கான ஓய்வுபெற்ற அதிகாரி பாலகிருஷ்ணன் புதிய ஆணையராக நியமனம் செய்திருப்பாக முதல்வர் நாராயணசாமி பேரவையில் அறிவித்தார். இதனைத் தொடர்நது கூட்டத்தை காலவரையின்றி பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து ஒத்திவைத்தார்.