tamilnadu

img

பாபர் மசூதி இருந்த இடத்தில் 18 மாதங்களில் ராமர் கோயில்

புதுதில்லி:
பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ராமர் கோயில் கட்டும் பணிகளை 18 மாதங்களில் துவங்க வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பு ‘கெடு’ விதித்துள்ளது.

அத்துடன், அயோத்தி நகரில், இந்துக் கலாச்சார அடையாளம் இருக்கும் எந்தப் பகுதியிலும் மசூதி இருக்கக் கூடாது என்றும் அந்த அமைப்பு பய முறுத்தல் செய்துள்ளது.
இதுதொடர்பாக, விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் தில்லி யில் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விஷயத்தில் இனிமேலும் நாங்கள் பொறுமை காக்கமுடியாது. 2-வது முறையாக பிரதமராக வந்திருக்கும் மோடிக்கு ராமர் கோயில் கட்டு வது குறித்து நினைவுபடுத்த விரும்புகிறோம்.இரு விஷயங்களில் விஎச்பி சமரசம் செய்து கொள்ளாது. முதலில் ராமர் பிறந்த இடத்தில் (?) ராமர் கோயில் கட்டுவதில் உறுதியாக இருக்கிறோம். 2-ஆவதாக அயோத்தியின் கலாச்சாரம் தொடர்பான பகுதிக்குள் எந்தவிதமான மசூதியும் இருக்கக் கூடாது.

விஸ்வ ஹிந்து பரிசத்தின் மார்க்தர்ஷக் சமிதியின் கூட்டம் ஹரித்துவாரில் வரும் 19 மற்றும் 20 தேதிகளில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் ராமர் கோயில் கட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிரதமர் மோடியிடம் ஒப்படை க்கப்படும். அதுமட்டுமல்லாமல், பாஜக-வின் தேர்தல் அறிக்கையில் ராமர் கோயில் கட்டும் திட்டம் இருக்கிறது என்பதையும் அப் போது நினைவுபடுத்துவோம்.

அதேநேரத்தில் மத்திய அரசு எடுத்துவரும் சில முன்னேற்ற மான நடவடிக்கையால்தான் பொறுமையாக இருக்கிறோம். ஆனால், இனிமேலும் பொறுத்திருக்க முடியாது. ஏற்கெனவே 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் பொறுமை காத்துவிட்டோம். அடுத்த 18 மாதங்களில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கும். அதற்கு முன்னதாக பிரதமர் மோடியைச் சந்தித்து ராமர் கோயில் தொடர்பாக அழுத்தம் கொடுப் போம்.” இவ்வாறு அலோக் குமார் கூறியுள்ளார்.