புதுதில்லி:
ராகுல் காந்தி வசித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினருக்கான இல்லத்தை மோடி அரசு பறித்துக் கொண்டது, நாடாளுமன்ற அலுவலக செய்திக்குறிப்பு மூலம்தெரியவந்துள்ளது.
புதிதாக பதவியேற்கும்மக்களவை உறுப்பினர் களுக்கு நாடாளுமன்றம் சார்பில் தில்லியில் வீடு ஒதுக்கப்படுவது வழக்கம். அந்த வீடுகளிலிருந்து எம்.பி.க்கள் தமக்கு விருப்பமான ஒன்றைத் தேர்வு செய்வர்.
இதன்படி, நடந்து முடிந்தபொதுத்தேர்தலில் புதிதாகதேர்வாகியுள்ள உறுப்பினர் களுக்கு ஒதுக்க தயாராக இருக்கும், காலியாக உள்ள வீடுகளின் பட்டியலை நாடாளுமன்ற அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதில், “12, துக்ளக் சாலை” என்ற முகவரியில் உள்ளராகுல் காந்தியின் வீடும் இடம் பெற்றுள்ளது. 2004-ஆம் ஆண்டு ராகுல் காந்தி முதல் முறையாக அமேதி தொகுதியின் மக்களவை உறுப்பினராக தேர்வானபோது அவருக்கு இந்த வீடு ஒதுக்கப் பட்டது. அப்போது முதல் அந்த வீட்டில்தான் ராகுல் வசித்து வருகிறார். நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில், அமேதி தொகுதியில் தோற்றாலும், கேரளத்தின் வயநாடு தொகுதியில் வெற்றிபெற்று, தொடர்ந்து எம்.பி.யாகவே அவர் நீடிக்கிறார்.
எனவே, அவர் புதிய எம்.பி. அல்ல.இச்சூழலில் நாடாளுமன்ற அலுவலகம் வெளியிட்டுள்ள, காலியாக இருக்கும் 517 வீடுகளின் பட்டியலில் ராகுல் காந்தி தற்போதுவரை வசித்து வரும் வீட்டைச்சேர்த்துள்ளனர். ஆனால், “12, துக்ளக் சாலை வீடு காலி” என்று அறிவிப்பு வெளியிடுவது தொடர்பாக, ராகுல் காந்தியின் அலுவலகத்துக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றுகூறப்படுகிறது. மோடி அரசின் இந்த நடவடிக்கை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.