tamilnadu

img

வெளிநாட்டில் தனியார்கள் வாங்கிய 3.41 பில்லியன் டாலர் கடன்...

புதுதில்லி:
இந்திய நிறுவனங்கள் 2019 அக்டோபரில் 3.41 பில்லியன் டாலர் அளவிற்கு வெளிநாடுகளில் கடன் வாங்கியுள்ளன.இது சென்ற ஆண்டைவிட இருமடங்குஅதிகம் ஆகும். சென்ற ஆண்டு இதே அக்டோபர் மாதத்தில் 1.41 பில்லியன் டாலர் அளவிற்கே, இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளிலிருந்து கடன் பெற்றிருந்தன. தற் போது அதைக்காட்டிலும் கூடுதலாக கடன் பெறப்பட்டுள்ளது.இந்தக் கடன்களில், 2.87 பில்லியன் டாலர், தானியங்கி இசிபி வழியாகவும், 538 மில்லியன் டாலர் ஒப்புதல் முறை இசிபி வழியாகவும் கைமாறியுள்ளன.இதில், முத்தூட் பைனான்ஸ் 400 மில்லியன் டாலர், எச்பிசிஎல் மிட்டல் எனர்ஜி 300 மில்லியன் டாலர், வர்தா சோலார் 251மில்லியன் டாலர், எல் அண்ட் டி 200 மில்லியன் டாலர், டெக்கான் பைன் கெமிக்கல் 140 மில்லியன் டாலர், ஆதித்யா பிர்லா பைனான்ஸ் 75 மில்லியன் டாலர் என தானியங்கி இசிபி வழியே கடன்களைப் பெற்றுள்ளன.ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் (400 மில்லியன் டாலர்), ராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் (138 மில்லியன் டாலர்) உள்ளிட்ட நிறுவனங்கள் ஒப்புதல் முறை இசிபி வழியே கடன் வாங்கியுள்ளன.