tamilnadu

img

பிரதமர் மோடி பேச்சு: அவைக்குறிப்பில் நீக்கம்

புதுதில்லி,பிப்.8- எதிர்க்கட்சிகளை விமர்சித்து நாடா ளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசிய வார்த்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.  நாடாளுமன்ற மாநிலங்களவை யில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பேசினார். அப்போது தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.பி.ஆர்)  குறித்து எதிர்க்கட்சிகளை விமர்சித்து, மோடி குறிப்பிட்ட வார்த்தை ஒன்றை அவைக்குறிப்பில் இருந்து மாநிலங்க ளவை தலைவர் வெங்கய்யா நாயுடு நீக்கியுள்ளார். அதேபோல், மாநிலங்க ளவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் பேசிய வார்த்தை ஒன்றையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கியு ள்ளார்.  கடந்த 2018 -ஆம் ஆண்டு பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் பிகே. ஹரிபிரசாத் பற்றிப் பேசிய வார்த்தை, இழிவாக இருந்ததால் அந்த வார்த்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.