tamilnadu

img

விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பு

உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் CISF துணை ராணுவப் படையில் உள்ள 300 Head Constable காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியின் பெயர்: தலைமை காவலர் (General Duty Sports Quota)
 

சம்பள விகிதம்: ரூ.25,500 - 81,100
வயது வரம்பு: 18 முதல் 23 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ ST/ OBC பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவதொன்றில் தேசிய/ சர்வதேச/ பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் ஜுனியர் அல்லது சீனியர் பிரிவில் பங்கேற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி: 
ஆண்கள் - உயரம்: குறைந்தபட்சம் 167 செ.மீ. இருக்க வேண்டும். (ST பிரிவினர்களுக்கு 160 செ.மீ.) மார்பளவு 81 செ.மீ. முதல் 86 செ.மீ. இருக்க வேண்டும்.

பெண்கள் - உயரம்: குறைந்தபட்சம் 153 செ.மீ. இருக்க வேண்டும்.
 

தேர்ந்தெடுக்கப்படும் முறை: விண்ணப்பதாரரின் விளையாட்டுத் தகுதி, மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Indian Postal Order/ Demand Draft-ஆக எடுத்து அனுப்ப வேண்டும். SC/ ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது. கட்டணம் செலுத்த வேண்டிய முகவரி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.cisfrectt.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்படுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 17.12.2019
 

விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டிய சான்றிதழ்கள் வருமாறு:

1. கல்வித்தகுதி மற்றும் மதிப்பெண் சான்றிதழ்
2. வயது சான்று (10 ஆம் வகுப்பு சான்றிதழ்)
3. SC/ ST/ OBC அல்லது EWS சான்றிதழ்
4. விளையாட்டு சான்றிதழ்கள்
5. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் - 2
6. விண்ணப்பக் கட்டண IPO/ DD.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.