புதுதில்லி,ஆக.25- மத்திய பாஜக அரசின் நடவடிக்கை யால் வெளிஉலக தொடர்பிலிருந்து துண்டி க்கப்பட்டுள்ள காஷ்மீரில் உயிர்காக்கும் மருந்துகள் கூட கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பாஜக அரசு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை ரத்து செய்து,மாநிலத்தை இரண்டாகப் பிரித்தது. இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு தகவல் தொடர்பு, தொலை தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டு, வெளி உலக தொடர்பு இல்லாமல் காஷ்மீரில் என்ன நடக்கிறது என்றே அறிய முடியாமல் தனித்தீவாக உள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் கூட உள்ளே நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. உயிர்காக்கும் மருந்துகள் கூட கிடைக்காமல் பொது மக்கள் தவித்து வருகின்றனர் என தெரிய வந்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சாஜித் அலி என்பவரின் தாயார் சுராயா பேகம் (வயது 65) சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டுள்ளார். அவருக்கு தேவையான மருந்து 2 நாட்களுக்கு இருந்துள்ளது. அடுத்த நாளுக்கான மருந்து வாங்க சாஜித் அலி முயற்சி செய்துள்ளார். கடந்த செவ்வா ய்க்கிழமையன்று ஸ்ரீநகருக்கு வந்து பல மருந்துக்கடைகளில் மருந்து கேட்டுள்ளார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. போக்கு வரத்து சேவை இல்லாததால் மிகவும் அவதி யான நிலையில் சிக்கியுள்ளார். பின்னர் ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு சென்று, தில்லிக்கு டிக்கெட் முன்பதிவு செய்து, அங்கிருந்து மருந்து வாங்கி சென்றுள்ளார். தொழிலதிபராக உள்ள சாஜித் அலிக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்கள் என்ன செய்வார்கள்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மருந்து விற்பனையாளர்கள் , உயிர் காக்கும் மருந்துகள் தீர்ந்துவிட்டதாக கூறுகிறார்கள். கிராமப்புறங்களில் மருந்துகளின் இருப்பு ஏற்கனவே குறைந்துவிட்டது, இதனால் இறப்பு ஏற்படுகிறது என்கிறார்கள். காஷ்மீரின் வடக்கே எல்லைக் கட்டுப் பாட்டு கோடு பகுதிக்கு அருகே அமைந்துள்ள உரி நகரத்தில் பிரபலமான மாலிக் மருந்துக் கடையின் விற்பனையாளர் கூறுகையில், எங்களிடம் மருந்துக்கள் கையிருப்பில் இல்லை. ஆகஸ்ட் 5 முதல் எங்களுக்கு எந்த விதமான புதிய விநியோகமும் கிடைக்க வில்லை. உயிர் காக்கும் மருந்துகள் எதுவும் கிடைக்கவில்லை என்றார். உரியில் உள்ள நம்லா கிராமத்தைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவர் கூறுகை யில், உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள் கிடைப்பதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் மருத்துவத்தின் முழுமையான பற்றாக்குறையை யாரும் கவனிக்கவில்லை.மருந்துகள் கிடைப்பது மற்ற அத்தியாவசியங்களை விட முக்கிய மானது. நாங்கள் மருந்துகள் இல்லாமல் இறந்து கொண்டிருக்கிறோம் என்று வேதனையுடன் கூறுகிறார்.
கடந்த 30 ஆண்டுகளில் காஷ்மீர் இதுபோன்ற ஒரு மோசமான மருத்துவ நெருக்கடியை அனுபவித்ததில்லை என்று மன்சூர் அகமது என்பவர் கூறுகிறார். 2016 ஆம் ஆண்டில் அமைதியின்மை போன்ற கடந்த காலங்களில் பள்ளத்தாக்கு சிக்கலான சவால்களை எதிர்கொண்டிருந் தாலும், மருந்து வழங்கல் ஒருபோதும் மோச மாக பாதிக்கப்படவில்லை. இது மிகவும் மோசமான நிலைமை என்று ஸ்ரீநகரைச் சேர்ந்த ஒரு மருத்துவர் தெரிவித்துள்ளார். தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் கிராமத்தில் வசிக்கும் குர்ஷி பேகம் புதன் கிழமை ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டார். அப்போது மருந்து இல்லை என்பதால் தனியார் காரில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் குர்ஷி பேகம் உயிரிழந்துவிட்டார். ஒவ்வொரு நாளும் இறப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் யாரும் பொறுப்பேற்கவில்லை என்று ஸ்ரீநகர் மாவட்ட மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழப்பே இல்லையாம்: ஆளுநர்
இந்நிலையில் இன்டர்நெட் சேவை, மொபைல் சேவையை நிறுத்தியது பள்ளத் தாக்கு பகுதியில் உயிர்களை காப்பாற்று கிறது. 10 நாட்களில் எந்தவொரு உயிரிழப்பு சம்பவமும் கிடையாது. தகவல்தொடர் பின்மை உயிரைக் காப்பாற்ற உதவினால், அதிலென்ன தீங்கு? என்று ஜம்மு -காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறியுள்ளார். கடந்த காலத்தில் காஷ்மீரில் ஏதாவது ஒரு நெருக்கடியான நிலை நேரிட்டாலே சுமார் 50 பேர் முதல்வாரத்திலே உயிரிழக்கும் சம்ப வம் நேரிட்டது. இப்போது இந்திய அரசு மனித உயிர்களை இழக்கக் கூடாது என்ற அணுகுமுறையை கையில் எடுத்துள்ளது. 10 நாட்களுக்கு மொபைல் போன்கள் சேவை மட்டும் இல்லாமல் இருக்கட்டும், மாநிலத்தில் மிக விரைவில் இயல்புநிலையை உறுதி செய்வோம் என்று சத்யபால் மாலிக் சமாளித்துள்ளார்.