tamilnadu

img

கடும் எதிர்ப்பிற்கு இடையே வேளாண் மசோதா நிறைவேற்றம் 

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்ப்பு வலுத்த நிலையிலும் , வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு கடுமையாக எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்ப்பை மீறி வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பலரும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். ஆனால், அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் கடுமையான அமளிக்கு மத்தியில்,  திரிணாமுல் காங்கிரஸ் எம்பி, டெரிக் ஓ பிரையன், சபை தலைவரின் இருக்கைக்கு அருகில் சென்று வேளாண் மசோதாவின் நகலை கிழித்து எறிந்தார்.  வேளாண் மசோதா நிறைவேற்றக்கூடாது என்று கூச்சலிட்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சபை தலைவரின் மைக் உடைக்கப்பட்டது. இந்த எதிர்ப்புக்கும் மத்தியில் வேளாண் மசோதா இயற்றப்பட்டது. எதிர்க்கட்சியினரின், ஆர்ப்பாட்டத்தால் அவை நாள் முழுவதும் பரபரப்பாக இருந்தது.