tamilnadu

img

அத்வானி, ஜோஷிக்கு மட்டும் ஆயுசுக்கும் அரசு பங்களாவா?

புதுதில்லி:
சிறப்பு கமோண்டோ படை (Special Protection Group- SPG) பாதுகாப்பு இல்லாதவர்களுக்கு அரசு பங்களா ஒதுக்க முடியாது என்ற சட்டத்திருத்தத்தை மத்திய பாஜக அரசு அண்மையில் நடைமுறைக்கு கொண்டுவந்தது.

இதன்படி, அண்மையில் எஸ்பிஜி பாதுகாப்புவிலக்கிக் கொள்ளப்பட்ட காங்கிரஸ் பொதுச்செய  லாளர் பிரியங்கா காந்தி, தில்லியில் அவர் தங்கியிருக்கும் “லோதி எஸ்டேட், எண்: 6பி முகவரி யிலுள்ள அரசு பங்களாவை ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும்” என்று நோட்டீஸூம்அனுப்பியது.இந்நிலையில், பிரியங்கா காந்திக்கு பொருந்தும் விதி, பாஜக மூத்த தலைவர்களான அத்வானிமற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு பொருந்தாதா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி
யுள்ளது.பாஜக-வின் மூத்தத் தலைவர்கள் அத்வானி மற்றும் முரளிமனோகர் ஜோஷி ஆகியோர் தற்போதும் அரசு பங்களாக்களில் தான் வசித்து வருகின்றனர். ஆனால்இவர்கள் எந்த அரசுப் பதவியும்வகிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் குறைந்த பட்சம் எம்.பி.யாக கூட இல்லை. சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோருக்கு ‘இசட் பிளஸ்’ (Z+) பாதுகாப்பு உள்ளது. இவர்களுக்கு அதுவும் கிடையாது. அவ்வாறிருக்கையில், இவர்கள் 2022 வரை அரசு பங்களாக்களில் தங்கிக் கொள்ளலாம் என்று மத்திய அமைச்சரவைக் குழு (Cabinet Committee on Accommodation - CCA) மூலம் சலுகை அளித்துள்ள மோடி அரசு, நேரு குடும்பத்தினரை மட்டும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பழிவாங்குகிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.