tamilnadu

img

‘மேக் இன் இந்தியா’ அல்ல; இது ‘ரேப் இன் இந்தியா’

புதுதில்லி:
பிரதமர் மோடியின் தலைமையில் நாடு,‘மேக் இன் இந்தியா’ விலிருந்து ‘ரேப் இன்இந்தியா’வை நோக்கி நகர்வதாககாங்கிரஸ் கட்சியின் மக்களவைக்குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிசாடியுள்ளார்.உன்னாவ் பாலியல் வழக்கு தொடர்பாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப் போதுதான், இவ்வாறு கடுமையாக அவர் கூறியுள்ளார்.“இந்த அவையில் உன்னாவ் பாலியல் வன்கொலை தொடர்பாக விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த உன்
னாவ் பெண் 95 சதவிகிதம் கொளுத்தப்பட்டு,அதன்பின் அவர் உயிரை விட்டிருப்பது நம்மை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்குகிறது. அதைக்காட்டிலும் வருத்தம் என்னவெனில், எதையும் வெளிப்படையாகப் பேசும் நமது பிரதமர் இதுபற்றி எந்த அறிக்கையும் தராததுதான். நாடு, ‘மேக் இன் இந்தியா’ வுக்குப் பதிலாக ‘ரேப் இன் இந்தியா’வாக மாறிக் கொண்டிருக்கிறது. எனவே, இனிமேல் ‘மேக் இன்இந்தியா’ என்பதற்குப் பதிலாக, ‘ரேப் இன் இந்தியா’ என்றே கூறவேண்டும் போலிருக்கிறது.”இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விமர் சித்துள்ளார்.