tamilnadu

img

நிர்பயா வழக்கு :  ஹேங்மேன் தயாராக இருக்க அறிவுறுத்தல்

புதுதில்லி,ஜன.19- நிர்பயா பாலியல் வன் கொலை வழக்கு குற்றவாளி களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ஹேங்மேன், தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று திகார்சிறை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தில்லியில் ஓடும்பேருந்தில் மருத்துவ மாணவி  நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொன்ற வழக்கில் 4 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களுக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை  சேர்ந்த பவான் என்ற  ஹேங்மேன் தண்டனையை நிறைவேற்ற உள்ளார். இந்நிலையில் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதி களில் ஹேங்மேன் பவான், தயார்நிலையில் இருக்குமாறு திகார் சிறை நிர்வாகம் அறி வுறுத்தியுள்ளது. முன்னதாக 4  குற்றவாளிகளையும் தூக்கில் போடும் பணி நிறைவடைந்தால், தனக்கும் நிர்பயாவின் பெற் றோருக்கும் நிம்மதி பெரு மூச்சாக இருக்கும் என்று பவான் கூறியிருந்தார்.