tamilnadu

img

முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் கணக்கில் காட்டாத சொத்துக்கள்... வெளிநாடுகளிடம் விவரம் கேட்கும் வருமான வரித்துறை?

புதுதில்லி:
இந்தியாவின் முதற்பெரும் பணக் காரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முதலாளியுமான முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரின் கணக்கில் காட்டப் படாத வெளிநாட்டுச் சொத்துக்கள் குறித்து, வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக, செய்திகள் வெளியாகியுள்ளன.

அதாவது, கறுப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ், முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி மற்றும் அவரது 3 பிள்ளைகளுக்கு கடந்த மார்ச்28-ஆம் தேதியே வருமான வரித்துறைமூலம் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு விட்டதாகவும், இதுவரை அந்த நடவடிக்கை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்ததாகவும் அந்த செய்திகள்கூறுகின்றன.பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளை அடிப்படையாகக் கொண்ட ‘கேபிட்டல் இன்வெஸ்ட்மெண்ட் டிரஸ்ட்’, அதன் கீழ் வரும் நிறுவனங்கள் மற்றும் ‘கேமேன்’ தீவுகளை அடிப்படையாகக் கொண்ட இன்ப்ராஸ்டிரக்சர் கம் பெனி நிறுவனத்தின் இறுதிப் பயனாளர்களாக முகேஷ் அம்பானி குடும்பத்தினர் இருந்ததாகவும், இது குறித்தவிவரங்களை அவர்கள் கணக்கில் காட்டவில்லை என்றும் வருமான வரித்துறை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இதுதொடர்பாக முகேஷ் அம்பானியின் குடும்பத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பியது மட்டுமன்றி, அவரின் சொத்து விவரங்கள் குறித்த தகவல்களை அளிக்குமாறு 7 வெளிநாடுகளுக்கும் மத்திய அரசின் சார்பில் கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.மேலும், சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், அமெரிக்கா, இங்கிலாந்து, மொரீஷியஸ், லக்சம்பர்க், செயிண்ட் லூசியாஆகிய நாடுகளிடம்தான் இந்த விவரங்களைக் கேட்டுள்ளதாகவும், ஒப்பந்தப்படி 90 நாட்களில் பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.