புதுதில்லி:
சண்டைக் காட்சிகளிலும், ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப் புள்ள காட்சிகளிலும், பிரபல நடிகரை நடிக்க வைக்காமல், அவருக்குப் பதிலாக மற்றொருவரை நடிக்க வைப்பது, சினிமாவில் உள்ள நடைமுறை. இந்த பதிலி நடிகரை, ‘டூப்’ என்பார்கள்.
ஆனால், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சன்னி தியோல், தனது எம்.பி. பணிகளை செய்வதற்கும் ‘டூப்’ ஒருவரை நியமித்து, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
“பஞ்சாப் மாநிலம் மொஹாலி, பால்ஹேரி கிராமத்தில் வசிக்கும் சுபிந்தர் சிங்கின் மகன் குர்பிரீத் சிங் பால்ஹேரியை எனது பிரதிநிதியாக நியமிக்கிறேன்; இதன்மூலம் எனது நாடாளுமன்றத் தொகுதியான குர்தாஸ்பூர் தொடர்பான முக்கியவிஷயங்கள் குறித்து, சம்பந்தப் பட்ட அதிகாரிகளுடன் குர்பிரீத் சிங் பால்ஹேரிதான் ஆலோசனைகளை நடத்துவார்” என்று தனதுகையெழுத்திட்ட கடிதம் ஒன்றையும்
பகிரங்கமாக சன்னி தியோல் வெளியிட்டுள்ளார்.
சன்னி தியோல் மும்பையில் வசித்து வருபவர் என்ற நிலையில், அவர் குருதாஸ்பூரிலேயே இருக்க முடியாது என்பதால், அந்த நேரங்களில் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்பது மற்றும் முக்கிய விஷயங்களை கவனிப்பது பால்ஹேரியின் வேலையாம். இந்நிலையில், சன்னி தியோலின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.“குருதாஸ்பூர் தொகுதி மக்கள்தியோலுக்குத்தான் வாக்களித்தனர், அவருடைய பிரதிநிதிக்கு அல்ல. சன்னி தியோல் தனக்காக பிரதிநிதியை நியமிப்பதன் மூலம் குருதாஸ்பூர் தொகுதி வாக்காளர்களுக்கு துரோகம் இழைத்துள்ளார். ஒரு எம்.பி. தனக்கு ஒரு பிரதிநிதியை எவ்வாறு நியமிக்க முடியும்?” என்று காங்கிரஸ் தலைவர் சுக்ஜீந் தர் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
சன்னி தியோல், பிரபல பாலிவுட் நடிகரான தர்மேந்திராவின் மகன்ஆவார். பாஜகவின் மதுரா தொகுதிஎம்.பி.யும் நடிகையுமான, ஹேமமாலினி இவரது சித்தி ஆவார். இந்தப் பின்னணியில்தான், கட்சி
யில் சேர்ந்த அடுத்தநாளே குருதாஸ்பூர் தொகுதி வேட்பாளராக சன்னி தியோலை, பாஜக அறிவித்தது.