புதுதில்லி:
பிரதமர் நரேந்திர மோடி மற்றும்விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள்தலைவர் அசோக் சிங்கால் ஆகியோருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்று சாமியார்கள் கூட்டமைப்பான ‘அகில இந்திய அஹாடா பரிஷத்’ வலியுறுத்தியுள்ளது.
அயோத்தியில் இன்று ரூ. 500 கோடியில் ராமர் கோயில் எழுவதற்கு இவர்கள்இருவரும்தான் காரணம் என்பதால், அவர்களுக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும் என்று விருது கொடுக்க வேண்டியதற்கான காரணத்தையும் சாமியார்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.“மறைந்த அசோக் சிங்கால் ராமர் கோயிலுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். இதற்காக அனைத்து சாதுக்களாலும் மதிக்கப்பட்டார். அவருக்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரதரத்னா’ வழங்கி கவுரவிக்க வேண்டும். அதேபோல, பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்த விருது வழங்கப்பட வேண் டும்” என்று அஹாடா பரிஷத்தின் தலைவரான மஹந்த் நரேந்திர கிரி கூறியுள்ளார்.இதுதொடர்பான தீர்மானம் மத்தியஉள்துறை அமைச்சர் அமித் ஷாமற்றும் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப் படும் என்றும் மஹந்த் கிரி தெரிவித் துள்ளார்.