tamilnadu

img

5 ஆண்டில் 72 முதலாளிகளை தப்பவிட்ட மோடி அரசு... பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணம் கொள்ளை

புதுதில்லி:
கடந்த ஐந்தாண்டுகளில், நிதிமோசடி உள்ளிட்ட பல்வேறு பொருளாதார மோசடி குற்றங்கள் செய்த 72 முதலாளிகளை மோடிஅரசு வெளிநாட்டிற்கு தப்பவிட்டுள்ளது.இந்திய வங்கிகளில் பல கோடிரூபாய் அளவிற்கு கடன் பெற்றுக்கொண்டு, அவற்றைத் திரும்பிச் செலுத்தாத விஜய் மல்லையா, நீரவ் மோடி, சந்தேசரா உள் ளிட்டோரை மோடி அரசு வெளிநாட்டிற்கு தப்பவிட்டது. கடந்த 2019 ஜனவரி 4-ஆம்தேதி வரை, இவ்வாறு மொத்தம்27 பெருமுதலாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பியிருந்தனர்.

இந்நிலையில், 2020 ஜனவரிக்குள்- ஓராண்டிற்குள் மேலும் 45 மோசடி முதலாளிகளை வெளிநாட்டிற்கு மோடி அரசு தப்பவிட்டுள்ளது.வெளிநாடுகளுக்கு தப்பிய மோசடிப் பேர்வழிகளில், புஷ்பேஷ் பெய்ட், ஆஷிஷ் ஜோபன் புத்ரா, விஜய் மல்லையா, சன்னிகல்ரா, எஸ்.கே. கல்ரா, ஆர்த்தி கல்ரா, வர்ஷா கல்ரா, ஜதின் மேத்தா,உமேஷ் பரேக், கம்லேஷ் பரேக், நிலேஷ் பரேக், எக்லவ்யா கார்க், வினய் மிட்டல், நீரவ் மோடி, நீஷல் மோடி, மெகுல் சோக்சி, சப்ய சேத், ராஜீவ் கோயல், அல்கா கோயல், லலித் மோடி, நிதின் ஜெயந்திலால் சந்தேசரா, தீப்திபென் சேதன்குமார் சந்தேசரா, ரிதேஷ் ஜெயின், ஹிதேஷ் என் படேல், மயூரிபென் படேல்,பிரிதி ஆஷிஷ் ஜோபன்புத்ரா உள்ளிட்டோர் முக்கியமானவர்கள் ஆவர். இதனை நாடாளுமன்றத்தில் மத்திய அரசே தெரிவித்துள்ளது.