tamilnadu

img

மோடி அறிவுரை, அவரது கட்சியினருக்கே அதிகம் தேவை... எதிர்க்கட்சிகளைப் பிறகு பார்க்கலாம்...

புதுதில்லி:
17-ஆவது மக்களவைத் தேர்தலுக்குப் பிந்தைய, முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் திங்களன்று தொடங்கியது. அப்போது, பிரதமர் மோடி பேசுகையில், “ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். எண்ணிக்கையைப் பற்றி கவலைப்படக் கூடாது;

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நீங்கள் ஊக்கத்துடன் சுறுசுறுப்பாக செயல்படுகிறீர்களா? என்பதுதான் முக்கியம்” என்று இலவச அறிவுரைகளை அள்ளி விட்டிருந்தார்.இந்நிலையில், பிரதமர் மோடியின் அறிவுரை குறித்து, காங்கிரஸ்மூத்த தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “பிரதமர் மோடி கூறிய அறிவுரைகள் அவரின் அமைச்சரவை உறுப்பினர்களுக்கும், ஜூனியர்களுக்கும் வேண்டுமானால், நிச்சயம் பயன்படும். ஏனெனில் பிரதமர் மோடியின் அறிவுரைகளை பெரும்பாலான நேரங்களில் அவர்களின் தலைவர்களே கடைபிடிப்பதில்லை” என பதி லடி கொடுத்துள்ளார்.மேலும், “பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளுக்கு அறிவுரை கூறுவதற்கு பதிலாக, அவர்களின் சொந்த கட்சியினருக்கு கூறலாம்”என்று தெரிவித்துள்ள சவுத்ரி,“ஜனநாயகம் என்பது கட்சிகள்வைத்திருக்கும் எம்.பி.க்களைஅடிப்படையாக வைத்தது இல்லை. மக்களின் கருத்துக்கள்,விவாதங்கள் மூலமே ஜனநாயகம் பிறக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.