புதுதில்லி, டிச. 1- நாட்டிலேயே லஞ்சம் குறைந்த மாநிலங்களில் கேர ளம் முதலிடம் பெற்றுள்ளது. லஞ்சத்தில் முதலிடத்தை ராஜஸ்தான் பிடித்துள்ளது. நாட்டில் 51 சதவிகிதம் பேருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற் பட்டுள்ளது. ஊழலை தடுக்க வலுவான ஏற்பாடு இல்லை. கருப்பு பணம் பெருக்கெடுத்து ஓடுவதை தடுக்க முடியவில்லை எனவும் ‘இந்திய ஊழல் ஆய்வு- 2019’ அறிக்கை சுட்டிக்காட்டி யுள்ளது. பெரும்பாலான ஊழல் வழக்குகளில் விஜிலன்சும் சிபிஐயும் வேடிக்கை பார்ப்ப தாகவும் அந்த அறிக்கை தெரி வித்துள்ளது. கேரளத்திலிருந்து ஆய்வில் பங்கேற்ற 90 சதவிகிதம் பேர் லஞ்சம் கொடுக்காமல் சேவை களை பெற்றதாக தெரிவித்துள் ளனர். லஞ்சம் கொடுக்க நேர்ந்த வர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளைவிட குறை ந்துள்ளது. முந்தைய ஆய்வில் லஞ்சம் கொடுத்ததாக 31 சத விகிதம் பேர் தெரிவித்தனர். ராஜஸ்தானில் 51 சத விகிதம் பேர் லஞ்சம் கொடுத் ததை ஒப்புக்கொண்டனர். பல முறை லஞ்சம் கொடுத்ததாக 24 சதவிகிதம் பேரும், ஓரிரு முறை கொடுத்ததாக 27 சதவிகிதம் பேரும் கூறினர். 30 சதவிகிதம் பேர் நேரடியாகவும், 30 சதவிகிதம் பேர் ஏஜெண்டு கள் மூலமாகவும் பணம் கொடுத் துள்ளனர். 6 சதவிகிதத்தினர் காரிய சாத்தியத்திற்காக அன்ப ளிப்புகள் வழங்கியுள்ளனர்.
விஜிலன்சும் சிபிஐயும்
மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு (விஜிலன்ஸ்) ஆணையமும் சிபிஐயும் பெரும்பாலான நிகழ்வுகளை வேடிக்கை பார்த்ததாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அலுவலகங்கள் கணினிமய மாக்கப்பட்டு சிசிடிவிகள் பொ ருத்தப்பட்ட பிறகும் லஞ்ச ஊழலை தடுக்க முடிய வில்லை. சமூக ஊடகங்கள் மூலம் ஆளுமை மற்றும் மக்கள் தொ டர்புகளை மேம்படுத்துவ தற்கான திட்டங்களை உரு வாக்கும் ‘உள்ளூர் வட்டங்கள்’ (Local circle) என்கிற நிறு வனமும், இந்திய சர்வதேச வெளிப்படைத்தன்மை (Trans perency International India) என்கிற ஊழல் அற்ற செயல்பா டுகளுக்கு தலைமை தாங்கும் ஒரு அரசு சாரா நிறுவனமும் இணைந்து இந்த ஆய்வு நடத்தியுள்ளன.
ஊழலை முற்றாக ஒழிக்க..
நாட்டிலேயே லஞ்சம் குறைந்த மாநிலங்களில் கேர ளம் முதலிடம் பிடித்திருப்பது ஊழலுக்கு எதிராக கேரள அரசு மேற்கொள்ளும் நடவ டிக்கைகளுக்கு கிடைத்த அங்கீ காரம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள் ளார். ஆட்சி நிர்வாகத்திலிருந்து முற்றாக ஊழலை துடைத்தெறி யும் லட்சியத்துடன் அரசு உள்ளது. இந்த லட்சியத்தை நிறைவேற்ற அரசு ஊழியர்க ளும் மக்களும் ஒரே சிந்தனை யோடும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.