tamilnadu

img

முதலீட்டாளர்கள் அஞ்சி ஓடுகிறார்கள்...பொருளாதார வீழ்ச்சிக்கு மோடி அரசே பொறுப்பு

புதுதில்லி:
இந்தியாவின் பொருளாதாரம் கடும்பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமன்றி, வெளிநாட்டு முதலீட்டாளர் களும் இந்தியாவில் முதலீடு செய்ய அஞ்சி ஓடுவதாகவும், பிரெஞ்சு பொருளாதார நிபுணர் கய் சோர்மன் (GuySorman) தெரிவித்துள்ளார்.

உலகின் முக்கியமான பொருளாதார வல்லுநர்களில் ஒருவரான கய்சோர்மன், இதுதொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது:“மோடி ஆரம்பத்தில் இந்தியத் தொழில் முனைவோர்களுக்கு சாதகமான பொருளாதார நடவடிக்கைகளைமேற்கொண்டு வந்தார். ஊழல் ஒழிப்புதொடர்பான அவருடைய நடவடிக்கைகள், ‘மேக் இன் இந்தியா’ போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆனால், திடீரென்று நாட்டின் பொருளாதாரம் சார்ந்தநோக்கத்தில் இருந்து விலகி அரசியல் நோக்கத்தில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். அவருடைய அரசியல் நடவடிக்கைகளால் உலகளாவிய அளவில் இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. தற்போது யாரும் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவதில்லை.

மோடியின் அரசியல் சார்ந்தோ, குடியுரிமைச் சட்டம் சார்ந்தோ நான் கருத்துகள் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் அவருடைய நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் கடும்பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என் பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.ஒரு அரசின் மீது நம்பிக்கை இருக் கும்பட்சத்தில் மட்டுமே அந்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்ளப்படும். ஆனால், மோடியின் ஆட்சிக் காலத்தில் அந்த நம்பிக்கை சிதைந்து வருகிறது. இது மிக கவலைக்குரிய விஷயமாகும்.
அதுமட்டுமல்ல, மோடி அரசு நாட்டின் வளர்ச்சி குறித்து பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகிறது. ஜிடிபி கணக்கீடும் இந்தியாவில் முறையாக மேற்கொள்ளப்படுவது இல்லை. இந்திய அரசு வெளியிடும் புள்ளிவிவரங்கள் எவையும் நம்பத் தகுந்தவையாக இல்லை.இந்தியா வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக அடையாளப்படுத் தப்பட்டு வந்த நிலையில், கடந்த செப்டம்பர் காலாண்டில் படு வீழ்ச்சி கண்டது.நடப்பு நிதி ஆண்டின் முதல் மற்றும்இரண்டாம் காலாண்டு வளர்ச்சி கடந்த6 ஆண்டுகளில் இல்லாத அளவில் 4.5 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.  முதலீடு குறைந்துள்ளது. நுகர்வும் குறைந்துள்ளது. வேலையின்மையும் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. போதிய வருமானம் இல்லாத நிலையில் கிராமப்புற மக்களின் நுகர்வு பாதிக்கப்பட் டுள்ளது. வறுமை பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.இவ்வாறு கய் சோர்மன் கூறியுள்ளார்.