tamilnadu

img

கடும் வீழ்ச்சியில் இந்தியப் பொருளாதாரம்!

புதுதில்லி:
2018-ஆம் ஆண்டு முதலே ஒவ்வொரு காலாண்டும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. 2019-20 நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன்காலாண்டில் மிக மோசமாக 5.6 சதவிகிதவளர்ச்சியையே இந்தியாகொண்டிருக்கிறது.சர்வதேச பொருளாதார தர மதிப்பீட்டு நிறுவனங்கள், ஒவ்வொரு மாதமும், இந்தியாவிற்கான ஜிடிபி கணிப்பை குறைத்து வருகின்றன. உலக வங்கி, ஐஎம்எப், ஆசிய வளர்ச்சி வங்கி, பிட்ச் ரேட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள், தங்களின் முந்தைய கணிப்பை வெகுவாக குறைத்துக்கொண்டுவருகின்றன.அந்த வகையில், ஜப்பானைச் சேர்ந்த ‘நோமுரா’ நிறுவனமும் இந்தியாவின் ஜிடிபி மதிப்பீட்டை வெகுவாகக் குறைத்துள்ளது. 2019-20 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 5.7 சதவிகிதமாக இருக்கும் என்று இதற்கு முன்னர் ‘நோமுரா’ நிறுவனம் கூறியிருந் தது. தற்போது, அதனை 4.9 சதவிகிதமாக குறைத்துள்ளது.

இந்தியாவின் நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறையையும் 3.7 சதவிகிதமாக ‘நோமுரா’ நிறுவனம் உயர்த்தி யுள்ளது. நிதிப் பற்றாக்குறையை 3.3 சதவிகிதத்துக்குள்ளேயே வைத்திருக்க அரசு இலக்கு நிர்ணயித்திருக்கும் நிலையில், நோமுரா நிறுவனத்தின் இந்த ஆய்வறிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.கார்ப்பரேட் வரியைக் குறைக்கும் மோடி அரசின் முடிவால், அரசின் வரி வருவாய் ரூ.1.45 லட்சம் கோடி வரை குறையும் என்றும், இதனால் நிதிப் பற்றாக்குறை மேலும்அதிகரிக்கலாம் என்று ‘நோமுரா’ நிறுவனம் எச்சரித்துள்ளது.நோமுராவைப் போன்று ‘மூடிஸ்’ நிறுவனமும், 2019-20-ம் நிதியாண்டிற்கான இந்தியாவின் ஜிடிபி கணிப்பைக் குறைத்துள்ளது. முன்பு, இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.2 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்திருந்த மூடிஸ், கடந்த அக்டோபரில், அதனை 5.8 சதவிகிதமாகக் குறைத்தது. தற்போது மேலும்0.2 புள்ளிகள் குறைத்து, 5.6 சதவிகிதத்திற்கு உள்ளாகவே ஜிடிபி வளர்ச்சி இருக்கும் என்று கூறியுள்ளது.