tamilnadu

img

கோவிட் 19க்கு எதிரான இந்தியாவின் யுத்தம்

மதவாதத்திற்கு இடம் கொடுக்காமல் ஒன்றுபட்டு நிற்போம்! -  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு

புதுதில்லி, ஏப்.2- கோவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தாக்கு தலுக்கு எதிரான இந்தியாவின் மாபெரும் யுத் தத்தில் மதவாதத்திற்கு சற்றும் இடம் கொடுக் காமல், மதரீதியான ஆத்திரமூட்டல்களுக்கு யாரும் இரையாகிவிடாமல், ஒட்டுமொத்த நாடும் ஒன்று பட்டு இந்த கொள்ளை நோயை தோற்கடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக் குழு வியாழனன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தில்லியில் தப்ளிகி ஜமாத்தின் கூட்டங்களில்  பங்கேற்ற பெரும் எண்ணிக்கையிலானவர்கள் அங்கிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு திரும்பிச் சென்ற நிலையில், அந்தந்த பகுதி களில் பலர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டி ருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இது மிகவும் கவலை தரக் கூடிய விஷயமாகும். மார்ச் மாதத்தின் மத்திய காலத்தில் தில்லியில் இதுபோன்ற பெரிய கூட்டங்கள் நடத்திட ஏற்கனவே கட்டுப்பாடுகள் அம லில் இருந்த நிலையில், இத்தகைய கூட்டத்தை நடத்தியது என்பது மேற்கண்ட ஜமாத் தலைமை யின் பொறுப்பற்ற செயல்பாடே ஆகும். இந்நிலை யில், மார்ச் 20, 21 தேதிகளில் மீண்டும் இரண்டாவது கூட்டம் நடந்திருக்கிறது. இதற்கு அதிகாரிகள் எப்படி அனுமதித்தார்கள் என்பதும் புரியவில்லை.

இத்தகைய பின்னணியில், சமூக ஊடகங்களில் கொரோனா பாதிப்புக்கு ஒரு குறிப்பிட்ட மதத் தைச் சேர்ந்தவர்கள் தான் காரணம் என்று கூறி மதச் சாயம் பூசியும், குறிப்பிட்ட சமூக மக்களை குறிவைத்தும் பிரச்சாரம் நடத்தும் முயற்சி களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்ட னம் தெரிவிக்கிறது. கொரோனா வைரஸ் என்பது மத அடிப்படையில் யாரையும் வேறுபடுத்தி பார்க்க வில்லை. எனவே இந்த பிரச்சனையை மதவாத கண்ணோட்டத்தோடு கொண்டு செல்லும் முயற்சி கள் அனுமதிக்கப்பட கூடாது.

அதேவேளையில் 200 பேருக்கு மேல் கூட வேண்டாம் என்று மார்ச் 13 அன்று வெளியிடப் பட்ட தடை உத்தரவுக்குப் பிறகு நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அனைத்து சமூக, மத மற்றும் அரசியல் ரீதியான மிகப் பெரிய மக்கள் திரள் கூடிய நிகழ்ச்சிகள் அனைத்தும் முழுமை யான விசாரணைக்கும் சோதனைக்கும் உள்ளாக் கப்பட வேண்டும். அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற வர்கள் தற்சமயம் எங்கிருக்கிறார்கள் என்று தேடிக் கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனை செய்யப் பட வேண்டியது அவசியம். தென்கொரியாவிலி ருந்தும், சிங்கப்பூரிலிருந்தும் இத்தகைய அனு பவங்களைத்தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த நாடுகளில் இந்தக் கூட்டத்தில் மிகப் பெரிய நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் பங்கேற்ற அனைத்து நபர்களையும் இடைவிடாமல் தேடிக் கண்டறிந்து அவர்களை முழுமையான பரிசோத னைக்கு உள்ளாக்கி தனிமை மருத்துவ பாது காப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து, அதன் மூலம்தான் கோவிட் 19 வைரஸின் சமூகப் பர வலை கட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை இன்றைக்கு பரிசோதனை செய்வதில் மிக மிக குறைவான விகிதத்தையே கொண்டிருக்கிறது. அதாவது, தென்கொரியாவுடன் ஒப்பிடும்போது 241 மடங்கு குறைவான விகிதத்திலேயே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது உடனடி யாக, அவசரத் தன்மையோடு, கட்டாயம் சரி செய்யப்பட வேண்டும்.

இது கோவிட் 19க்கு எதிரான இந்தியாவின் யுத்தம். இந்தப் போரை மதவெறிமயமாக்க மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் விரைவிலேயே நாம் வெற்றி கொள்வதை தடுத்து நிறுத்துவதில்தான் போய் முடியும். இது நம்மை நாமே தோற்கடித்துக் கொள்வதாகும். எனவே இத்தகைய ஆபத்தான மதவாத அணிதிரட்டல் பிரச்சாரத்தை பரப்புவதை அரசு உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

இதுபோன்ற ஆத்திரமூட்டல்களுக்கு மக்கள் இரையாகிவிட வேண்டாம் என்றும், இந்த கொள்ளை நோயை வீழ்த்துவதற்கு நமது ஒன்று பட்ட முயற்சிகளே நம் அனைவருக்கும் பலம் அளிக்கும் என்றும், ஒன்றுபட்டு நிற்போம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக் குழு வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஐஎன்என்)