tamilnadu

img

இந்தியா கொரோனா தொற்று காலத்தில் 20 பில்லியன் டாலர் அந்நிய  முதலீட்டைப் பெற்றுள்ளது 

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் இந்தியா 20 பில்லியன் டாலருக்கும் அதிகமான அந்நிய நேரடி முதலீட்டை (எஃப்.டி.ஐ) பெற்றுள்ளது என்று வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றுநோய்களின் போது , இந்த ஆண்டு 20 பில்லியன் டாலருக்கும் அதிகமான அன்னிய நேரடி முதலீட்டைப் பெற்றுள்ளோம். உலகளாவிய அந்நிய நேரடி முதலீடு 2019 ல் சற்று குறைந்து இருந்ததாகவும்,தற்போது, இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பல உலகளாவிய தொழில்நுட்ப நிறுவங்கள் இந்தியாவில் கணிசமான முதலீடுகளாக கூகிள் 10 பில்லியன் டாலர், பேஸ்புக் 5 பில்லியன் டாலர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் இறையாண்மை செல்வ நிதியமான முபடாலாவின் 1.2 பில்லியன் டாலர் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க முதலீடுகளை அறிவித்துள்ளதாக வெளியுறவு செயலாளர் தெரிவித்தார்.

இந்தியா-இங்கிலாந்து பொருளாதார கூட்டாண்மை குறித்து பேசுகையில், இருதரப்பு வர்த்தகம் ஒரு முன்னேற்றப் பாதையில் சென்று 2019 ஆம் ஆண்டில் 24 பில்லியன் பவுண்டுகளைத் தொட்டுள்ளது என்றும், மொத்தம் 28.21 பில்லியன் டாலர் முதலீடுகளுடன் இந்தியாவில் ஆறாவது பெரிய முதலீட்டாளராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.