tamilnadu

img

இந்தியாவில் 2902 ஆக அதிகரிப்பு தமிழகத்தில் 485

புதுதில்லி, ஏப்.4- இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண் ணிக்கை 2 ஆயிரத்து 902 பேராக  அதிகரித் துள்ளது. மருத்துவ சிகிச்சையில் 184 பேர் குணமடைந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதித்தோ ரின் எண்ணிக்கை வெள்ளியன்று இரவு  2 ஆயிரத்து 804 பேராக இருந்தது. இந் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா வில் மேலும் 25 பேருக்கும், கோவாவில் மேலும் ஒருவருக்கும், மத்தியப்பிரதேச மாநிலம் மொரேனாவில் மேலும் 10 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது.

இவர்களைச் சேர்த்து நாட்டில் புதி தாக 98 பேருக்கு கொரோனா தொற்று நோய் உறுதியானது. இதையடுத்து பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 902 பேராக அதிகரித்துள்ளது. இதில் வெளி நாட்டினர் 57 பேர் அடங்குவர்.

மகாராஷ்டிரா  மாநிலத்தில் 423 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழ் நாட்டில் 411 பேருக்கு கொரோனா உறுதி யாகியுள்ளது. தில்லியில் 386 பேர்  பாதிக் கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு 68 பேர் பலியாகியுள்ள னர்.  நாடு முழுவதும் மருத்துவ சிகிச்சையில் கொரோனாவில் இருந்து 184 பேர் குணம டைந்துள்ளனர். அதிகபட்சமாக மகா ராஷ்டிராவில் 42 பேரும், கேரளாவில் 41 பேரும் கொரோனாவில் இருந்து குணம டைந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகரிப்பு

தமிழகத்தில் சனிக்கிழமையன்று 74 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர்.இதைத்தொடர்ந்து பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 411 பேரில் இருந்து 485 பேராக அதிகரித்துள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களி டம் கூறுகையில்,  சனிக்கிழமையன்று 74 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 485 பேராக அதிகரித்துள்ளது. ஒரே குழுவில் இருந்து 422 பேருக்கு நோய்தொற்று பரவியுள்ளது.  90,543 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண் காணிக்கப்படுகின்றனர். மருத்துவமனை யில் சிகிச்சை பெறுபவர்களின் உடல்நிலை சீராகவே உள்ளது என்று தெரிவித்தார்.