tamilnadu

img

குடியுரிமைச் சட்ட போராட்டங்களில் நிருபர்களைத் தாக்குவதா? பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கண்டனம்

புதுதில்லி:
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களையொட்டி, செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டிருப்பதற்கு, பத்திரிகை ஆசிரியர் சங்கமான ‘எடிட்டர்ஸ் கில்டு’ கண்டனம் தெரிவித்துள்ளது.மங்களூரு உள்ளிட்ட இடங்களில் போலீசாரால்  செய்தியாளர்கள் தாக்கப் பட்ட நிலையில் ‘எடிட்டர்ஸ் கில்டு’ இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அறிக்கையில் கூறியிருப்பதாவது:“நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களின் போது,செய்தி சேகரிக்கச் சென் றுள்ள பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப் பட்டுள்ளன. செய்தி சேகரிக்கச் செல்வது, பத்திரிகையாளர்களின் அடிப்படை உரிமை. நாட்டில் நடக்கும்போராட்டங்களை மக்களுக் குத் தெரிவிக்கவே பத்திரிகையாளர்கள் செல்கின்றனர். ஆனால், அவர்களைக்குறிவைத்து காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலானது, ஊடகச் சுதந்திரத்தை ஒடுக்கும் செயலாகும். எனவே, செய்தி சேகரிக்கச் செல்லும் பத்திரிகையாளர்களுக்குப் போதிய சுதந்திரம் அளிக்க உள்துறைஅமைச்சகம் தகுந்த நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.