tamilnadu

img

என்ஆர்சி வந்தால் இந்துக்களும் முகாமில் அடைக்கப்படுவார்கள்... தில்லி முதல்வர் கெஜ்ரிவால் எச்சரிக்கை

புதுதில்லி:
மத்திய அரசின், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (என்பிஆர்),தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிராக, தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு, சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமையன்று தீர்மானம் நிறைவேற்றியது.இதன்மூலம், என்ஆர்சி,என்பிஆரை நடைமுறைப்படுத்தமாட்டோம் என்று அறிவித்து, சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய மாநிலங்களின் வரிசையில் 11-ஆவது மாநிலமாக தில்லி இணைந்தது.

முன்னதாக என்பிஆர், என்ஆர்சி-யில் உள்ள ஆபத்துக் கள் குறித்து, முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால், சட்டப்பேரவையில் பேசினார்.அப்போது, “நாட்டில்என்பிஆர் செயல்படுத்தப்பட் டால் என்ஆர்சி செயல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது. குடியுரிமையை நிரூபிக்கத் தவறினால் முஸ்லிம்கள் மட்டுமல்ல இந்துக்களும் சேர்ந்தேதடுப்பு முகாம்களில் அடைக்கப்படுவார்கள்” என்று கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.“90 சதவிகித மக்களிடம் குடியுரிமையை நிரூபிக்கப் பிறப்புச்சான்றிதழ் இல்லை. அவ்வாறிருக்கையில், என்பிஆர், என்ஆர்சி-யின்படி குடியுரிமையை நிரூபிக்கக் கூறினால், எவ்வாறு நிரூபிப்பார்கள்? எனக்கும், என் மனைவிக்கும் பிறப்புச் சான்றிதழ்இல்லை, என் பெற்றோருக் கும் இல்லை; எனது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கும், 61 எம்எல்ஏ-க்களுக் கும்கூட பிறப்புச் சான்றிதழ் இல்லை; அவ்வாறிருக்கையில் எங்கள் அனைவரையுமே தடுப்பு முகாமுக்கு அனுப்புவார்களா?” என்று கேள்வி எழுப்பியிருக்கும் கெஜ்ரிவால், “என்பிஆர், என்ஆர்சி அனைத்து மக்களையும் அச்சுறுத்தும் சட்டமாகும்; தயவுசெய்து இதை மத்தியஅரசு நிறுத்த வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.