சென்னை, செப்.10- ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ராஜினாமா செய்வது தான் நூறு நாள் சாதனையா? என்பதனை பாஜக உணர்ந்து தன்னை திருத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டாம் முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பாஜக நூறு நாட்கள் சாதனை என கொண்டாடி மகிழ்கின்றது. நூறு நாட்க ளுக்குள்ளாக எழுபது ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மோட்டார் வாகன தொழில் உட்பட பல்வேறு தொழில்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி தொழில் தொடரமுடியாமல் மூடுவிழா நடத்திக் கொண்டுள் ளன” என்று கூறியுள்ளார். இது மட்டுமின்றி, இந்திய அரசுப் பணியில் தேர்ச்சி பெற்று உயர் அதிகாரிகளாக பணியாற்றி வருபவர்கள் ஒவ்வொரு வரும் தாங்களாகவே ராஜினாமா செய்து வருகின்றனர். அதிகாரிகளும், நீதிபதிகளும் தங்களின் மனச்சாட்சிக்கு அடி பணிந்து ராஜினாமா செய்து கொண்டுள்ளனர். இதுதான் ஆட்சியின் நூறு நாள் சாதனையா? என்பதனை பாஜகவினர் உணர்ந்து தன்னை திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.