புதுதில்லி:
இந்தியாவில் நடப்பு 2020-21 நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை இருமடங்காக- சுமார் 7.9 சதவிகித அளவிற்கு அதிகரிக்கலாம் என்று ‘ஸ்டேட்பாங்க் ஆப் இந்தியா’ (எஸ்பிஐ) தனதுஆய்வறிக்கையில் கூறியுள்ளது.முன்னதாக நிதிப்பற்றாக்குறை 3.5 சதவிகிதமாக இருக்கும் என்றே ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ கணித்திருந்தது. ஆனால் பிரதமர் மோடியின் 20 லட்சம் கோடி ரூபாய் நிதித்தொகுப்பு அறிவிப்பின் பின்னணியில் பற்றாக்குறை அதிகரிக்கும் என்று கணிப்பை மாற்றியுள்ளது.
“20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பில், முதல் கட்டத்தில் அறிவிக்கப்பட்ட 1.7 லட்சம் கோடி ரூபாய்நிதித் தொகுப்பும், பல்வேறு நாணயகொள்கை நடவடிக்கைகள் மூலம்5.6 லட்சம் கோடி ரூபாய் ஊக்கமும், இரண்டாவது கட்டமாக 5.94லட்சம் கோடி ரூபாயும் அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கிடையில் இன்னும் 6.70 லட்சம் கோடி ரூபாய்க் கான தொகுப்பு அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறத்தில் சுமார் 4.2 லட்சம்கோடி ரூபாய் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தில் 2.1 சதவிகிதம் கடன் வாங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் அதிக பற்றாக்குறையுடன், நிலையான கடன் வரம்பு பிரச்சனையும் எழுகிறது” என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவிகிதமாக இருந்த அரசின் கடன், 2011 நிதியாண்டு முதல்அதிகரித்து வருவதாகவும், கடந்தஎட்டு ஆண்டுகளில் மட்டும் அரசின்கடன் 62 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் அறிக்கையில் எஸ்பிஐ குறிப் பிட்டுள்ளது.