புதுதில்லி:
தேசிய சேமிப்புத் திட்டம், கிஷான் விகாஸ் பத்திரம், பொது சேமநல நிதியம்(Public Provident Fund) போன்ற பொதுமக்களுக்கான சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதம்
0.1 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம், நிதியமைச்சகத்தால் ஒவ்வொரு காலாண்டும் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். இதன்படி, பொது சேமநல நிதியம் (Public Provident Fund) திட்டத்துக்கு கடந்த ஏப்ரல் முதல்ஜூன் வரையான காலாண்டில் 8 சதவிகிதம் வட்டி வழங்கப் பட்டது. ஆனால், ஜூலை - செப்டம்பர் காலாண்டுக்கு 7.9 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.ஐந்து ஆண்டுகளுக்கான தேசிய சேமிப்புச் சான்று (National Saving Certificate) திட்டத்துக்கான வட்டி, கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் 8 சதவிகிதம் வழ ங்கப்பட்டது. இது ஜூலை - செப்டம்பர் காலாண்டுக்கு 7.9சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டு டெபாசிட்டு களுக்கான வட்டி விகிதம் 7.8 சதவிகிதமாக இருந்த நிலையில், அது 7.7 ஆகவும், ஐந்து ஆண்டுகால ஆர் டி டெபாசிட்டு களுக்கான வட்டி விகிதம் 7.3 சதவிகிதத்தில் இருந்து 7.2 சதவிகிதமாகவும், ஐந்து வருட மூத்தகுடிமக்கள் சேமிப்புத் திட்டங் களுக்கான வட்டி விகிதம் 8.7-ல் இருந்து 8.6 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.இதேபோல செல்வமகள் திட்டத்துக்கான (Sukanya Samridhi Yojana) வட்டி விகிதம் 8.4 சதவிகிதமாகவும், கிஷான் விகாஸ் பத்திரங்கள் (Kisan Vikas Patra) திட்டத்துக்கு 7.6 சதவிகிதமாகவும் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.அதோடு 112 மாதங்களில் முதிர்வடையும் திட்டங்களின் கால அளவு, 113 மாதங்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.