புதுதில்லி:
இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரியஐடி நிறுவனமான இன்போசிஸ் இதுவரையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக் கர்களுக்கு வேலை வழங்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் நந்தன் நிலேகனி தெரிவித்துள்ளார்.
\2017ஆம் ஆண்டில் இன்போசிஸ் நிறுவனத் தின் அப்போதைய தலைமைச் செயலதிகாரியாக இருந்த விஷால் சிக்கா, அமெரிக்காவில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்று கூறியிருந் தார்.இதற்காக அங்கு நான்கு தொழில்நுட்பமையங்களையும் புத்தாக்க மையங்களையும் திறப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.அதன்படியே மூன்று ஆண்டுகளுக்குள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கர் களுக்கு இன்போசிஸ் நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது.டிரம்பின் விசா கெடுபிடிகளால், அமெரிக்கா சென்று வேலை பார்க்கும் இந்தியர்களின் கனவு ஏற்கெனவே கேள்விக்குறியாகி இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.