tamilnadu

img

காஷ்மீரில் அடக்கமுறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பரூக் அப்துல்லா சகோதரி மற்றும் மகள் கைது

காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை ரத்து செய்ததை கண்டித்து போராட்டம் நடத்திய முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் சகோதரி மற்றும் மகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீரின் 370வது சட்டப்பிரிவை ரத்த செய்து மத்திய அரசு அறிவித்தது. அதன் பின்னர் அங்குள்ள முக்கிய தலைவர்கள் அனைவரும் வீட்டு காவலில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டனர். மேலும் தொலைத்தொடர்புகள் மற்றும் செல்போன் தொடர்பு போன்றவை ரத்து செய்யப்பட்டது. தற்போது தொலைத்தொடர்புகள், செல்போன் தொடர்புகள் ஆகியவை பழைய நிலையை அடைய தொடங்கியநிலையில் அங்குள்ள பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அவர்கள் காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை நீக்கப்பட்டதை கண்டித்தும், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததை ரத்து செய்யக்கோரியும் கோசங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இப்போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் முன்னாள் முதல்வரின் சகோதரி சுரையா, மகள் சபியா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.