பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள எழுத்தர் (Clerk) பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு மையம் வெளியிட்டுள்ளது.
அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி, கனரா வங்கி, சிண்டிகேட் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 17 பொதுத் துறை வங்கிகளுக்கு நாடு முழுவதும் உள்ள கிளைகளில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் நாளை (செப். 17) முதல் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க, SC/ST/PWD/EXSM பிரிவின் கீழ் உள்ளவர்கள் ரூ.100 கட்டணமும், மற்ற அனைத்து பிரிவின் கீழ் உள்ளவர்கள் ரூ. 600 கட்டணமும் செலுத்த வேண்டும். இதற்கான ஆன்லைன் முதல்நிலைத் தேர்வு வரும் டிசம்பர் மாதம் 7, 8, 14 மற்றும் 21 ஆம் தேதிகளிலும், மெயின் தேர்வு 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ஆம் தேதியிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.