tamilnadu

img

தில்லி மதவெறி வன்முறை அமைதியையும் நிவாரணத்தையும் உறுதிப்படுத்துங்கள்

ஜனாதிபதிக்கு  அனைத்துக்  கட்சித்  தலைவர்கள் கடிதம்

புதுதில்லி, பிப்.28-  தில்லியில் நடந்த  மதவெறி வன்முறை வெறியாட்டங்களுக்கு எதிராக  உடனடியாகத் தலையிட்டு, மனிதாபிமான அடிப்படையில் நிவாரணம் காண முன்வர வேண்டும் என்று  அனைத்துக் கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் மூலம் வலியுறுத்தி யுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா,  திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் பிரபுல் பட்டேல், லோக் தந்த்ரிக் ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற உறுப் பினர் சஞ்சய் சிங், ஆர்ஜேடி நாடாளுமன்ற உறுப்பினர் பேரா. மனோஜ் குமார் ஜா ஆகி யோர் இணைந்து குடியரசுத் தலைவருக்கு எழுதி யுள்ள கடிதத்தில் கோரியிருப்பதாவது: 

தில்லியில் நடந்த வன்முறை வெறி யாட்டங்கள் தொடர்பாக எங்களின் வேதனை களையும் கவலைகளையும் தங்களிடம் தெரி விப்பதற்காகத் தங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கித்தருமாறு கோரியிருந்தோம்.  கடந்த மூன்று நாட்களில் 37 பேருக்கும் மேலானவர்கள் உயிரிழந்துள்ளனர். இது மேலும் அதிகரிக்கக் கூடும். 200-க்கும் மேற்பட் டோர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக் கானோரின் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. சொத்துக்கள் தீ வைத்து நாசமாக்கப் பட்டுள்ளன. அவர்களின் அடிப்படை வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன. ஆயுதந்தரித்த ரவுடிக் குண்டர்கள், பாது காப்புப்படையினரின் தொந்தரவு எதுவும் இன்றி  மனிதர்கள் மேற்கொண்ட மாபெரும் தாக்குத லாகும். இது கண்டிக்கத்தக்கது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழான மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசில் இதை ஏற்க முடியாது. தங்களைச் சந்திப்பதற்காக பிப்ரவரி 28-க்கும் மார்ச் 2-க்கும் இடையே நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டிருந்தோம். எனினும் தங்களால் இயலாது என்று தெரிவிக்கப்பட்டதால் இக்கடிதத்தை அனுப்பியிருக்கிறோம்.

1.தங்களின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் தில்லி துணைநிலை ஆளுநர் தலைமையில் அமைதிக் குழு உடனடியாக அமைத்திட வேண்டும். இயல்பு வாழ்க்கைத் திரும்புவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும். வன்முறை வெறியாட்டங்களைத் தூண்டும் விதத்தில் பொது மேடைகளில்பேசியவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை உடனடியாகப் பதிவுசெய்து, விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

2.வீடற்றவர்களுக்கு நிவாரண முகாம்கள் அமைக்க  வேண்டும். அவர்கள் மீது மீண்டும் தாக்குதல் ஏற்படாத விதத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திட வேண்டும். அத்தியா வசியப் பொருள்கள் போதுமான அளவிற்கு அளித்திட வேண்டும். 

3.உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் உரிய இழப்பீடுகள் அளிக்க வேண்டும்.

4.வீடிழந்தவர்கள், சொத்துக்களை இழந்தவர் கள் மற்றும் வணிக நிறுவனங்கள் சூறையா டப்பட்டதற்கும் உரிய இழப்பீடுகள் அளிக்க  வேண்டும்.      

5. மக்கள் மத்தியில் சமூக நல்லிணக்கம் பேண அமைதிப் பேரணி நடத்திட எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

6- நடைபெற்றுள்ள வன்முறை வெறியாட்டங் கள் மக்கள் மத்தியில் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு, குறிப்பாக குழந்தை கள் மத்தியில் மன வேதனையை ஏற்படுத்தி இருப்பதால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய விதத்தில் மனநல மையங்கள் (trauma centres) அமைக்க வேண்டும்.இவ்வாறு  கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.   
 

-ந.நி.