புதுதில்லி, ஜூன் 20- உள்நாட்டுத் தேவைக்கு போதிய இருப்பு உள்ளதால், ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி மீதான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு மலே ரியா எதிர்ப்பு மருந்தான, ஹைட் ராக்சிகுளோரோகுயின் மாத்திரை கள் மற்றும் அது தொடர்பான மருந்து பொருட்கள் பயன்படுத்தப்படு கின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால், கடந்த மார்ச் 25 ஆம் தேதி ஹைட் ராக்சிகுளோரோகுயின் ஏற்று மதிக்கு தடை விதிக்கப்பட்டது.
தற்போது, ஹைட்ராக்சிகுளோ ரோகுயின் மாத்திரைகளின் உற் பத்தித் திறன் 3 மடங்காக அதிகரிக் கப்பட்டு, ஒரு மாதத்திற்கு 30 கோடி மாத்திரைகள் தயாரிக்கப் படுகின்றன. இந்தியாவின், உள் நாட்டுத் தேவையை விட உபரி மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட் டுள்ளதாக மருந்தியல் துறை பரிந் துரை செய்துள்ளது. இதையடுத்து வெளி வர்த்தகத் துறை தலைமை இயக்குநர் அலு வலகம் ஹைட்ராக்சிகுளோரோ குயின் மாத்திரைகள் மற்றும் அது தொடர்பான மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான தடை யை நீக்கியது தொடர்பான அறி விப்பை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.