tamilnadu

img

மின்சார வாகனக் கொள்கை... பின்வாங்கும் மோடி அரசு?

புதுதில்லி:
மின்சார வாகனங்களை அறிமுகப்படுத் தும் விஷயத்தில், மத்திய அரசு நிதானத்தைக்கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.மின்சார வாகன உற்பத்திக்கே இனி சலுகைகள் அளிக்கப்படும்; ‘பிஎஸ் 4 இயந்திரம்’ பொருத்தப்பட்ட வாகனங்களை மட்டுமே இனிமேல் விற்பனை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு அண்மையில் கட்டுப்பாடுகள் விதித்தது. இதனால், இந்தியாவில் பெட்ரோல் - டீசல் வாகன உற்பத்தித் தொழில்கடும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. டாடா மோட்டார்ஸ், மாருதி, அசோக் லேலண்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் கூட இதிலிருந்து தப்ப முடியவில்லை. கதவடைப்பு செய்ய வேண்டிய நிலை, இந்த தொழிற்சாலைகளுக்கும் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களும் பல லட்சம் பேர் வேலையிழப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். இதனிடையே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கனரக தொழில்கள் துறை அமைச்சர் அரவிந்த் சாவந்த் ஆகியோரை, வாகன உற்பத்தியாளர்கள் கடந்த வாரம் சந்தித்துப் பேசியதாகவும், அப்போது, மின்சார வாகன உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, வாகனப்பதிவுக் கட்டணத்தை ரூ. 600-இல் இருந்து ரூ. 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டதை கைவிடவும் வலியுறுத்தியுள்ளனர்.அதனடிப்படையில், மின்சார வாக னங்கள் உற்பத்தியை சில மாதங்களுக்கு தாமதப்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.