புதுதில்லி:
ஒரே நேரத்தில் மக்களவைக்கும் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்துவது நல்லதுதான் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கை யை முன்வைத்து மக்களவைக்கும் சட்ட மன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக வரும் 19ஆம் தேதி தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.இந்த நிலையில் மக்களவை உறுப்பின ராக பதவியேற்பதற்காக தில்லி செல்வதற்குமுன்பு, சென்னை விமான நிலையத்தில் திங்கள் காலை (ஜூன் 17) செய்தியாளர்களி டம் பேசிய விசிக தலைவர் திருமாவளவனி டம் இதுதொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “மக்களவைக்கும், சட்ட மன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல்நடத்துவது எந்த அளவிற்கு சாத்தியம் என தெரியவில்லை. அப்படி நடந்தால் நல்லது தான். அது தேர்தல் ஆணையத்தின் செல வைக் குறைக்கும். காலமும் விரயமாகாது. ஆனால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மிகப்பெரிய கால இடைவெளியில்தான் தேர்தல் நடந்துவருகிறது. அதனை எந்த அளவுக்கு சீர்செய்ய முடியும் என்று தெரிய வில்லை ” என்று பதிலளித்தார்.
பிரதமரை தமிழக முதல்வர் சந்தித்ததுதொடர்பான கேள்விக்கு, “பிரதமரை முதல்வர் சந்தித்து தமிழக பிரச்சனைகள்குறித்து மனு அளித்ததாக சொல்லப்படு கிறது. அதே வேளையில் உட்கட்சிப் பிரச்ச
னை குறித்துத்தான் பிரதமரிடம் பேசியுள் ளார். தமிழகத்தின் பிரச்சனைகள் குறித்துஎதுவும் பேசவில்லை என்ற விமர்சனங் களும் எழுந்துள்ளன. தமிழக அரசு சுதந்திரமாக செயல்பட வேண்டும். மத்திய அரசின்தலையீடு இருப்பதால்தான் அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை வெடித்துள் ளது. மோடியும் அதிமுகவுக்கு தலைமை தாங்கி நடத்துகிறார் என்பதுதான் அவர்கள் சொல்ல வருவது என்று நினைக்கிறேன்” என்றும் விமர்சித்தார். மேலும் தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்து மக்களவை யில் குரல் கொடுப்போம் என்றும் உறுதி யளித்தார்.