tamilnadu

img

இணையவழி கல்விமுறை சரியானதாக இருக்காது...

புதுதில்லி:
பள்ளி மாணவர்களுக்கு இணையவழியில் வகுப்புக்களை நடத்துவது சரியானதாக இருக் காது என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே. கஸ்தூரி ரங்கன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பேட்டி ஒன்றை கஸ்தூரி ரங்கன் அளித்துள்ளார்.அதில் “மனிதனின் 86 சதவிகித மூளை வளர்ச்சி 8 வயதுக்குள் நடக்கிறது. இந்த காலகட்டத்தில் தொடர்ச்சியான கலந்துரையாடல் உள்ளிட்டநேரடி தொடர்பின் மூலம் குழந்தைகளின் மூளையை முறைப்படி தூண்டா விட்டால் அதன் செயல்திறன் குறையவாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

“உயர்கல்வி பயிலும் மாணவர்களைப் போல, பள்ளி மாணவர்களுக்கும் இணையவழி வகுப்புகள் நடத்துவது சரியான முறை அல்ல!” என்று தெரிவித்திருக்கும் கஸ்தூரி ரங்கன் “இந்த விவகாரத்தில் மிகவும் கவனமாக செயல்படவேண்டும், எவ்வித அறிவியல் அடிப்படையும் இல்லாமல் இதுபோன்ற அணுகுமுறையைக் கையாளக் கூடாது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.குறிப்பாக, உடல் மற்றும் மன ரீதியாக பள்ளி மாணவர்களுடன் நேரடியாக தொடர்புகொள்ள வேண்டியது அவசியம் என்று கூறியிருக்கும் கஸ்தூரி ரங்கன், இணையதள வகுப்புகள் மூலம் மாணவர்களிடம் உள்ள விளையாட்டு தன்மை, படைப்பாற்றல் உள்ளிட்ட திறமைகளை வெளிக்கொண்டுவர முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.“மழலையர் மற்றும் முதல்,இரண்டாம் வகுப்புக் குழந்தைகளுக்கு இணையவழி வகுப்புகள் நடத்துவது சரியல்ல! நேரில் பாடம்கற்பிப்பதன் மூலம்தான் குழந்தைகளை கவர முடியும்” என்று “பாரத ரத்னா” விருது பெற்ற விஞ்ஞானி சி.என்.ஆர். ராவும் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.