tamilnadu

img

மோடி ஆட்சியில் குடிநீர் தட்டுப்பாடா?

புதுதில்லி:
இந்தியாவை மோடி ஆளும்போது,வறட்சியோ, குடிநீர் தட்டுப்பாடோ எப்படி, ஏற்படும்? என்று கேட்டுள்ளார், மத்திய ஜல்சக்தி (நீர்வளத்துறை) அமைச்சர் கஜேந்திர செகாவத்.

“இந்தியாவில் எங்கு பார்த்தாலும், தண்ணீர் நிரம்பித் தத்தளிக்கிறது; அப்படியிருக்க, தண்ணீர் இல்லை என்று சொல்பவர்கள் எல்லாம் ஆண்டி இந்தியர்கள், மோடிக்கு எதிரானவர்கள்” என்ற ரீதியில் பேட்டி அளித்துள்ளார். மோடி ஆட்சியில் தண்ணீர் பற்றாக்குறை வார்த்தைக்கே இடமில்லை என்றும் கூறியுள்ளார்.மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மத்திய நீர் ஆணையம் (Centrall Water Commission) கடந்த மே 18-ஆம் தேதி, வறட்சி தொடர்பான ஆலோசனை (Drought Advisory) ஒன்றை தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத்,கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங் கானா என பல மாநிலங்களுக்கு அனுப்பியது. அதாவது நாட்டிலுள்ள அணைகளில் 20 சதவிகிதத்திற்கும் குறைவாகவே நீர் இருப்பதால், தண் ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கும் விதமாக இந்த சுற்றறிக்கையை அனுப்பியது. 

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் 91 பெரிய நீர்த் தேக்கங்களின் முழு கொள்ளளவு 162 பில்லியன் க்யூபிக் மீட்டர். ஆனால் தற்போது இந்தநீர்த் தேக்கங்களில் 36 பில்லியன் க்யூபிக் மீட்டர்-தான் நீர் இருக்கிறது. அதாவது மொத்த கொள்ளளவில் 22 சதவிகிதம் மட்டுமே தண்ணீர் இருக்கிறது.என்று தனது இணையதளப் பக்கத்திலேயே மத்திய நீர் ஆணையம் விரிவாககுறிப்பிட்டிருந்தது.

அதுமட்டுமல்ல, இந்தியாவில் தற்போது 18 சதவிகிதம் பேருக்குத்தான் குழாய் வழியாக நீரை வீட்டுக்கே கொண்டு சென்று கொடுக்கிறோம். மீதமுள்ள 82 சதவிகிதம் பேர் பொதுக் குழாய்,ஆற்றங்கரை, அடி பம்ப், கார்ப்பரேஷன் லாரி போன்றவைகளைத் தான்நம்பி இருக்கிறார்கள். இந்த பிரச்சனையை தீர்க்கத்தான் ஜல் சக்தி (நீர் சக்தி) அமைச்சகம் அமைக்கப்பட்டுள் ளது என்றும் அண்மையில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.ஆனால் இவற்றையெல்லாம் மறைத்துவிட்டுத்தான், ஜல் சக்தி துறைஅமைச்சர் கஜேந்திர செகாவத், தண்ணீர் பற்றாக்குறையே இல்லை என்று, மோடி மீது சத்தியம் செய் துள்ளார்.