tamilnadu

img

பூண்டு, வெங்காயம் சாப்பிடாதீர்கள்... நிர்மலா சீதாராமன் ‘அறிவுரை’

புதுதில்லி:
அன்றாட சமையலுக்கு பெரிய அளவில் பயன்படுத்தப்படும் வெங்காயத்தின் விலை, தங்கத்தின் விலைக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வால், சமையலுக்கு வெங்காயத்தை மிகச் சிறிய அளவிலேயே பயன்படுத்தும் நிலைமைக்கு பொதுமக்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.இந்நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் வெங்காய விலைஉயர்வு குறித்து பிரச்சனை கிளப்பினர். விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வியடைந்து விட்டதாகவும், கிலோ ரூ. 67-க்கு வெங்காயத்தை இறக்குமதி செய்து, சந்தையில்அதனை 130 முதல் 140 ரூபாய்க்கு விற்பதாகவும் குற்றம் சாட்டினர். 

இதற்கு பதிலளித்த, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெங் காய விலை உயர்வு பற்றியெல்லாம் தனக்கு ஒரு கவலையும் இல்லை என்பது போல, “நான் வெங்காயம் மற்றும்பூண்டு அதிகம் சாப்பிடுவதில்லை. சமையலறையில் வெங்காயத்துடன் அதிகம் தொடர்பில்லாத குடும்பத்திலிருந்து நான் வந்திருக்கிறேன்” என்றுகூறி சர்ச்சையை கிளப்பினார். அதாவது, பிராமண சமூக குடும் பங்கள் வெங்காயம், பூண்டை பெரிய அளவிற்கு பயன்படுத்துவதில்லை என்பதையே இவ்வாறு மறைமுகமாக கூறியுள்ள நிர்மலா சீதாராமன், மற்ற வர்களும் இதைப் பின்பற்றினால், விலை உயர்வு பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்பதாக அறிவுரை வழங்கியுள்ளார். மேலும், அதிகவெங்காயத்தை சாப்பிடுவது ஒருவரை எரிச்சலடையச் செய்கிறது என்று மருத்துவக் காரணம் ஒன்றையும் கண்டுபிடித்துக் கூறியுள்ளார்.நிர்மலா சீதாராமனின் இந்த பொறுப்பற்ற மற்றும் குடும்பப் பெருமையை முன்னிறுத்தும் பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.