புதுதில்லி:
இந்து மகா சபையின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான வி.டி. சாவர்க்கரின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் மோடி ட்விட்டர் பதிவு மூலம் சாவர்க்கருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
“வீர சாவர்க்கரின் பிறந்த நாளில் அவருக்குத் தலை வணங்குகிறேன். வலிமையான இந்தியாவுக்கு தைரியத்தையும் தேச பக்தியையும் முடிவில்லாத அர்ப்பணிப்பையும் தந்தவர்.தேசத்தைக் கட்டமைப்பதில் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட ஏராளமான மக்களுக்கு அவர் ஓர் உத்வேகம்” என்று மோடி கூறியுள்ளார்.
மோடி புகழ்ந்திருக்கும், வி.டி. சாவர்க்கர், இந்துத்துவா வெறுப்பு அரசியலை விதைத்தவர்களில் முக்கியமானவர் ஆவார். இந்து மகா சபையின் தலைவர்களில் ஒருவர். இவரால் ஊட்டி வளர்க்கப்பட்ட நாதுராம் விநாயக் கோட்சேதான், மகாத்மா காந்தியை சுட்டுப் படுகொலை செய்தார். அந்த வகையில் காந்தி படுகொலை வழக்கில் வி.டி. சாவர்க்கரும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, பின்னர் விடு
தலை ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.