tamilnadu

img

கச்சா எண்ணெய் விலை 9 சதவிகிதம் அதிகரித்தும் பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை மோடி அரசின் தேர்தல் கால ஏமாற்று வேலை!

புதுதில்லி, ஏப்.17-சர்வதேச சந்தையில், கச்சா எண் ணெய் விலை நிலவரத்தை பொறுத்தே, இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்துகிறோம்; மத்திய அரசுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றுநீண்ட காலமாக எண்ணெய் நிறுவனங் கள் கூறி வருகின்றன. இதுதான் உண்மை என்பதை நிரூபிப்பதற்காக, தங்கம் - வெள்ளி நிலவரத்தைப் போல, பெட்ரோல், டீசல் விலையை, நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையையும் எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகிறது. ஆனால், சர்வதேச சந்தையில், கடந்த 1 மாதத்தில் கச்சா எண்ணெய் விலை 9 சதவிகிதம் வரை உயர்ந்தும், இந்தியாவில் 1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே பெட்ரோல் - டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.சர்வதேச சந்தையில் கடந்த மார்ச் 10 முதல் ஏப்ரல் 10 வரை எண்ணெய் விலை (க்ஷசநவே உசரனந) 9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது, இந்த காலத்தில்71.73 டாலர் வரை பேரலுக்கு அதிகரித்துள்ளது. ஆனால், பெட்ரோல் விலை 1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உயர்த்தப்பட்டுள்ளது.சர்வதேச அளவில் 9 சதவிகிதம் விலை அதிகரித்தும், இந்தியாவில் 1 சதவிகிதம்கூட விலையேற்றம் இல்லை என்றால், அந்த அளவிற்கா, எண்ணெய்நிறுவனங்களுக்கு மக்கள் மீது பாசம் வந்து விட்டது? என்று கேள்விகள் எழுகின்றன.


அதுமட்டுமல்ல, இந்த குறைவான விலையேற்றத்திற்கும், மத்திய அரசுக்கும், நடந்து வரும் மக்களவைத் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை என்று எவ்வளவுதான் முயன்றாலும் அதை நம்ப முடியவில்லை.மேலும், மத்திய அரசுக்கும் பெட் ரோல் - டீசல் விலை உயர்வுக்குமான தொடர்புகளுக்கு, கடந்த தேர்தல்கால விலை நிலவரங்களே சாட்சி இருக் கின்றன.கடந்த ஜூன் 2017 முதல் ஏப்ரல் 2018 வரையிலான காலத்தில், பெட்ரோலின் மாதாந்திர விலை அதிகரிப்பையும், கச்சா எண்ணெய் விலையையும் ஆராய்ந்ததில், சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலையை விட, இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலைகள் 4 மடங்கு அதிகரித்துள்ளன.அதாவது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 1 மடங்கு உயர்ந்தால், இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலைகள் நான்கு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. இவை சாதாரணக் காலங்களில் இருக்கும் நடைமுறைகள். ஆனால், தேர்தல் கால நடைமுறைகள் முற்றிலும் வேறு. கடந்த 2018-ஆம் ஆண்டு கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக ஏப்ரல் முதல் மே மாதம் வரையிலான காலத்திலும் இது நடந்திருக்கிறது. அப்போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 11 சதவிகிதம் விலை அதிகரித்தது. ஆனால்,உள் நாட்டில் பெட்ரோல் விலை 1 சதவிகிதத்திற்கு மேல் உயர்த்தப்படவில்லை.


கடந்த 2017-இல் குஜராத் தேர்தல் நேரத்திலும் இதுவே நடந்துள்ளது. டிசம்பர் 2017-இல் குஜராத்தில் நடைபெற்ற தேர்தலின் போது அக்டோபர் - நவம்பர் வரையிலான காலகட்டத்தில் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை 10 சதவிகிதம் அதிகரித்தது. ஆனால் நவம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பெட்ரோல் விலை 2 சதவிகிதமும், அக்டோபர் முதல் நவம்பர்வரையிலான காலத்தில் 1 சதவிகிதமும் குறைக்கப்பட்டதும் நடந்தது.கடந்த 2018 செப்டம்பர் - அக்டோபர் வரையிலான காலத்தில்கூட, கச்சா எண்ணெய் விலை 8 சதவிகிதம் அதிகரித்திருந்தபோதும், உள் நாட்டில் விலை 2 சதவிகிதம் மட்டுமேஅதிகரித்திருந்தது. அப்போது பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகள் வரி விலக்கும்அளிக்கப்பட்டது.இதுதான் தற்போது மக்களவைத் தேர்தலையொட்டியும் நடந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் கச்சா எண்ணெய்விலை 9 சதவிகிதம் அதிகரித்தும் பெட் ரோல் - டீசல் விலை 1 சதவிகிதம் அளவிற்கே உயர்த்தப்பட்டிருக்கிறது.தேர்தல் வரும்போதெல்லாம், செய்யும் ஏமாற்று வேலையை, இப்போதும் மோடி அரசு செய்திருப்பதாகவே தெரிகிறது. மக்களின் கோபம் தங்களுக்கு எதிராகத் திரும்பி தேர்தலில் தோற்றுவிடக் கூடாது என்பதற்காகவே மோடி அரசு பெட்ரோல் - டீசல் விலை உயர்வில் தலையிட்டு, மட்டுப்படுத்தி வைத்துள்ளது. தேர்தல் முடிந்து ஒருவேளை மீண் டும் மோடியே வருவாரென்றால், அப்போது இருக்கிறது மக்களுக்கு கஷ்டகாலம். கடந்த முறையைப் போல தாங்கக் கூடிய வகையில் அது இருக்காது. வண்டி, வாகனங்களை நிறுத்தி விட்டு மக்கள் அனைவரும் கால்நடையாகவே திரிய வேண்டியதுதான்.