புதுதில்லி:
பொதுத் துறை வங்கிகளிடமிருந்து பெற்ற கடனை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத கார்ப்பரேட் கடனாளிகள் பற்றி கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கேள்விகளுக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக்சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
கேள்வி: நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் பெற்ற கடனை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்த தவறிய கார்ப்பரேட்டுகளை அரசாங்கம் இதுவரை அடையாளம் கண்டுள்ளதா? அப்படியானால், அந்த நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட கார்ப்பரேட்டுகளின் பெயர்கள் மற்றும் நிலுவைத் தொகை, பற்றியவிவரங்கள் தேவை. அந்த நிலுவைத் தொகை யை வசூலிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளின் விவரங்கள் என்னென்ன?
பதில்: அ) & (ஆ): பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பெற்ற கடனை வேண்டுமென்றே திருப்பி செலுத்த தவறிய தனிப்பட்ட கார்ப்பரேட்டுகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களை அடையாளம் காணல் மற்றும் அவர்களின் பெயர்கள் மற்றும் நிலுவையில் உள்ள கடன் தொகை பற்றிய விவரங்கள் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ள விவரங்களின் படி, பெரிய கடன்களுக்கான மத்திய களஞ்சியத்தின் (சி.ஆர்.ஐ.எல்.சி) தரவுத் தளத்தில், மொத்த நிதி அடிப்படையிலான மற்றும் நிதி அல்லாத அடிப்படையிலான ரூ.5கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட வெளிப்பாடுகளைக் கொண்ட அனைத்து கடன் பெற்றவர்களின் சில கடன் தகவல்களை வங்கிகள் தெரிவிக்கின்றன. ஆர்.பி.ஐ மேலும் தெரிவித்துள்ளது என்னவெனில், பிப்ரவரி 2019
முதல், CRILCயின் ஒரு பகுதியாக, அறிக்கை அளித்த நிறுவனங்களின் படி, வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்த தவறியுள்ளவர்களாக குறிப்பிடப்பட்டவர்களின் தகவல்கள், அவர்களின் நிதி முன்பணங்கள், நிலுவையில் உள்ள தொகை மற்றும் தள்ளுபடி செய்த தொகை30.09.2019 அன்று உள்ள படி, ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட விபரத்தில் தரப்பட்டுள்ளது.
(இ) கடனை திருப்பி செலுத்த தவறியவர்களிடமிருந்து, நிலுவைத் தொகையை பெற அரசாங்கம் எடுத்த பல முயற்சிகள் கீழ்க்கண்டவாறு:(1) செயல்படாத சொத்து என வகைப்படுத்தப் பட்ட, ரூ.50 கோடிக்கு மேல் உள்ள அனைத்து கணக்குகளையும்,சாத்தியமான மோசடியின் கோணத்திலிருந்து ஆராயவும், வேண்டுமென்றே திருப்பிச் செலுத்த தவறியது மோசடி என புகார் அளிக்கப்பட்டால் உடனடியாக அதனை ஆராய முயற்சி எடுக்குமாறு அனைத்து பொதுத் துறை வங்கிகளும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.