இந்தியாவில் 25 வெளிநாட்டவர்கள் உள்பட 147 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.
சீனாவின் உகான் மாகாணத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து கல்வி நிலையங்கள், புராதானச் சின்னங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 25 வெளிநாட்டவர்கள் உள்பட 147 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை 3 பேர் உயிரிழந்த நிலையில், 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.