டேராடூன்
இமயமலை அடிவாரத்தில் உள்ள இந்திய மாநிலமான உத்தரகண்டில் கொரோனா பாதிப்பு மிதமாக உள்ளது. காரணம் அம்மாநிலத்தின் எல்லை மலைகளோடு இருப்பதால் தான். இதுவரை அங்கு 958 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 பேர் உயிரிழந்துள்ளனர். 222 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் அம்மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் சத்பால் மஹாராஜுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் நேரடி தொடபிள் இருந்த மனைவி, 2 மகன்கள், மருமகள்கள் என மொத்தம் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த வெள்ளியன்று அமைச்சரவை கூட்டதில் பங்கேற்றுள்ளதால் அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் உட்பட 4 அமைச்சர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
தலைமை செயலகம் மற்றும் முதல்வர் அலுவலகம் அடுத்த மூன்று நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.