திருமலை
கொரோனா ஊரடங்குக்கு பிறகு மத்திய அரசின் நெறிமுறைப்படி 83 நாளுக்கு பின் ஜூன் 8-ஆம் தேதி நாட்டின் பிரசத்திபெற்ற தலங்களுள் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டது. 11-ஆம் தேதி முதல் அனைத்து பக்தர்களும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கோவிலுக்குள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் நடை திறக்கப்பட்ட அடுத்த சில நாட்களில் திருப்பதி கோவிலிலும் கொரோனா தனது பரவலை தொடங்கியது.
இதுவரை அந்த அப்பகுதியில் 80-கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இன்று (வியாழன்) மேலும் 15 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானத்தின் ஆகம ஆலோசகரான ரமண தீக்சிதுலு டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மொத்தம் 50 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் 25 பேருக்கு முடிவுகள் வெளிவர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.